For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் டாப் பணக்காரர்கள் தங்கள் வாழ்வில் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் தங்கள் வாழ்வில் செய்த முதல் வேலை என்னவென்று பார்ப்போம்.

உலக பணக்காரர்கள் பலர் தங்கள் வாழ்வை மிக எளிமையாகத் துவங்கி பின்னர் படிப்படியாக முன்னேறி உள்ளனர். பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படி சின்ன சின்ன வேலைகள் செய்து முன்னேறிய பணக்காரர்களில் சிலரைப் பார்ப்போம்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது வாழ்க்கையை கம்ப்யூட்டர் புரோகிராமராகத் துவங்கியுள்ளார்.

மைக்கேல் டெல்

மைக்கேல் டெல்

டெல் கம்ப்யூட்டர் கம்பெனியின் நிறுவனரும், சிஇஓவுமான மைக்கேல் டெல் சீன உணவகத்தில் தட்டு கழுவியுள்ளார். அது தான் அவரது முதல் வேலை ஆகும்.

வாரன் பஃப்பட்

வாரன் பஃப்பட்

உலகின் வெற்றிகரமான முதலீட்டாளரும், பெர்க்ஷைர் ஹாத்தவே குழுமத்தின் தலைவருமான வாரன் பஃப்பட் செய்தித்தாள் டெலிவரி சர்வீஸ் வைத்து நடத்தியுள்ளார். இது தான் அவரின் முதல் வேலை ஆகும்.

சார்லஸ் ஸ்வாப்

சார்லஸ் ஸ்வாப்

அமெரிக்காவின் பிரபல தரக மற்றும் பேங்கிங் கம்பெனியான சார்லஸ் ஸ்வாப் கார்பரேஷன் நிறுவனர் சார்லஸ் ஸ்வாப் தனது 11வது வயதில் வால்நட்டை பொறுக்கி விற்று வந்துள்ளார்.

ஜெஃப்ரீ பிசோஸ்

ஜெஃப்ரீ பிசோஸ்

அமேசான் டாட் காம் நிறுவனர் ஜெஃப்ரி பி. பிசோஸ் மெக்டொனால்ட்ஸ் கடையில் உணவு தயாரிக்கும் பகுதியில் வேலை பார்த்துள்ளார். இது தான் அவரது முதல் வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Did you know that Dell founder Michael Dell washed dishes at a Chinese restaurant?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X