For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும்?

By Siva
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தை தாங்கள் தான் தாக்கியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த கோகலிமாவியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 217 பயணிகள், 7 விமான ஊழியர்களுடன் எகிப்தில் உள்ள சினாய் செங்கடல் கடற்கரை நகரமான ஷரம் எல் ஷேக்கில் இருந்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சனிக்கிழமை கிளம்பியது.

விமானம் கிளம்பிய 20 நிமிடத்தில் சினாயில் உள்ள நெகேல் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாகினர். இந்நிலையில் விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்

ஐஎஸ்

ரஷ்ய விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்கிறார்கள் நிபுணர்கள். தீவிரவாதிகளிடம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை தாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த் ஏவுகணை இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

ரஷ்ய விமானம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் விமானத்தில் வெடிகுண்டை வைத்திருக்கலாம் என்கிறார்கள்.

ஏதோ

ஏதோ

விமானம் ஏதோ காரணத்திற்காக தரையை நோக்கி வந்துள்ளது. யாரோ கேப்டனை விமானத்தை தரையை நோக்கி விமானத்தை இயக்க வைத்திருக்கலாம். விமானம் தரையை நோக்கி வருகையில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடைமைகள்

உடைமைகள்

எகிப்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் சரியாக சோதனை செய்யப்படுவது இல்லை என்று சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானி

விமானி

விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறோ அல்லது விமானிகளின் தவறோ காரணமாக இருக்க முடியாது என்று கோகலிமாவியா நிறுவனம் மற்றும் ரஷ்ய விமான போக்குவரத்து ஏஜென்சி தெரிவித்துள்ளது.

English summary
Aviation experts are saying that though Russia refuses to accept ISIS terrorists' claim of the plane crash, terror plot could not eliminated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X