For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக் உலகை விட்டு செல்கிறேன்.. பதவி விலகிய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.. தொடரும் பேஸ்புக் பிரச்சனை

வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் தன்னுடைய வேலையைவிட்டு வெளியேறுவதாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பதவி விலகிய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்...வீடியோ

    நியூயார்க்: வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் தன்னுடைய வேலையைவிட்டு வெளியேறுவதாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் தற்போது வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு அவர் பெரிய விளக்கமும் கொடுத்துள்ளார்.

    பேஸ்புக் போஸ்ட்

    அவர் தனது பதவி விலகல் குறித்து பேஸ்புக்கில் ''நானும் பிரைனும் சேர்ந்து வாட்ஸ் ஆப் தொடங்கி கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல பயணம். ஆனால் இப்போது வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது. வாட்ஸ் ஆப்பை மக்கள் பல வகைகளில் பயன்படுத்தும் நேரத்தில் நான் அதில் இருந்து விலகுகிறேன். இந்த தொழில்நுட்ப உலகிற்கு வெளியே கொஞ்ச நாள் இருக்க போகிறேன். என்னுடைய காரை சரி செய்வது, ப்ரிஸ்ஃபி விளையாடுவது என்று நேரம் நேரம் செலவழிக்க போகிறேன்'' என்று எழுதியுள்ளார்.

    மார்க் பதில்

    மார்க் பதில்

    இதற்கு மார்க் ஜுக்கர்பெர்க் "உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வேன். நீங்கள் உலகை இணையம் மூலம் இணைப்பதற்கு செய்த செயலுக்கெல்லாம் நான் கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்ததற்கு எல்லாம் நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.'' என்று கூறியுள்ளார். ஆனால் மக்கள் அதற்கு கிண்டலாக பதில் அளித்துள்ளனர்.

    அச்சம்

    அச்சம்

    பேஸ்புக்கில் சரியான அளவிற்கு மக்களின் தகவல்கள் பாதுக்கப்படவில்லை என்று இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். வாட்ஸ் ஆப் நிறுவனம் பேஸ்புக்கின் கைகளுக்கு சென்ற பின், வாட்ஸ் ஆப்பிலும் இது போல மக்களின் தகவல்கள் திருடப்படுகிறது என்று இவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மொத்தமாக இவர் வேலையைவிட்டு வெளியேறி இருப்பது நிறைய சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

    பழைய பிரச்சனை

    ஏற்கனவே வாட்ஸ் ஆப்பின் இன்னொரு துணை நிறுவனரான பிரைன் ஆக்டன் பேஸ்புக் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ''இதுதான் நேரம் உடனடியாக பேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் டெக் உலகில் பெரிய புயலை கிளப்பி இருந்தது.

    English summary
    WhatsApp co-founder Jan Koum to quits, posts a sad note in Facebook. His abrupt resignation makes people worried, Facebook privacy issue once again came to limelight after this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X