For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இளைஞர்களிடையே தகவல் பரிமாற்றத்தில் கொடிகட்டி பறந்துவருகின்ற வாட்ஸ் அப் நிறுவனமானது, 2015 ஆம் ஆண்டில் இலவச வாய்ஸ் கால் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியில் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி வாட்ஸ் அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்சனைகள்:

தொழில்நுட்ப பிரச்சனைகள்:

வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ் அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிக் குறைப்பாடுகள்:

ஒலிக் குறைப்பாடுகள்:

குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிப்பில் அறிமுகம்:

புதிய பதிப்பில் அறிமுகம்:

புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் 4.5.5 பதிப்பில் வெளியாகுகிறது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

வருவாய் பாதிக்கும்:

வருவாய் பாதிக்கும்:

இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

தொய்வடையும் தொலைபேசி நிறுவனங்கள்:

தொய்வடையும் தொலைபேசி நிறுவனங்கள்:

ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.

English summary
WhatsApp has announced that the introduction of its voice-calling feature has been delayed until early next year, Digital Spy reveals. The ability to make and receive calls over WiFi was expected to be added in the second quarter of 2014, but Jan Koum revealed the postponement at the Code/Mobile conference this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X