For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்!

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17ம் தேதி ஆறுகள் எல்லாம் பச்சையாக மாறும். அது ஒரு சுவாரஸ்ய தினம்.

அமெரிக்கா போன்ற பல நாடுகளில் ஆறுகெளெல்லாம் பச்சை கலரில் ஓடுகிறது தெரியுமா . தண்ணி எல்லாம் ஒரு நிமிடத்தில் சுத்தி இருக்கிற புல்வெளி மாதிரி பச்சை கலரில் சல சலக்கிறது.

மார்ச் 17 மேலை நாடுகளில் சிறப்பா கொண்டடாடுகிற விழாக்களில் ஒன்றான செயின்ட் பாட்ரிக் தினம். இது தான் காரணம். இந்த விழாவை அங்கே வார இறுதியில் எப்படி கொண்டாடுறாங்க பார்க்கலாம் வாங்க.

பச்சை கலர் சிங்க் சாங்

பச்சை கலர் சிங்க் சாங்

சிங்க் சாங் பச்சை கலர் சிங்க் சாங் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படி தான் எல்லோரும் பச்சை கலர் ஆடை போட்டுக் கொள்கிறார்கள். அது மட்டுமா பச்சை கலர் தொப்பி, ஸ்கார்ப் , கம்மல், மாலை என்று என்ன என்னெல்லாம் அணிகலன்கள் அணிகிறார்களோ எல்லாமே பச்சை தான் போங்க. திரும்புகிற பக்கம் எல்லாம் பச்சை சட்டை முகங்கள் பார்க்கவே சூப்பர்.

பச்சை வண்ணம் பூசி

பச்சை வண்ணம் பூசி

அது மட்டுமா தங்களையும் சில பேர் பச்சை வண்ணம் பூசிக் கொள்கிறார்கள் நம்ம ஊரில் ஹோலி பண்டிகையில் பல வண்ணம் பூசிக்கொள்கிற மாதிரி இந்த நாளில் பச்சை வண்ணத்தை சிலர் உடையில் பூசிக் கொள்கிறார்கள். சிலர் ஒரு படி மேல போய் உடம்பில் பூசிக்கொள்கிறார்கள். அது வேற லெவல்.

பச்சையாக மாறி போகும் ஆறு

பச்சையாக மாறி போகும் ஆறு

அதோடு முடிவதில்லை. அந்த ஊரில் உள்ள ஆறு எல்லாம் அன்றைக்கு பச்சையாக மாறி விடுகிறது. மக்கள் எல்லோரும் கூடி இருக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றில் பச்சை நிறம் கலந்து அப்படியே அந்த ஆறு எல்லாம் பசுமையாக அழகாகி பச்சை நிறமாகி கண்கள் இமைக்க மறக்கும் தருணத்தில் நிறைய பேர் ஓடத்தில் ஸ்விங் ஸ்விங் என்று வந்து சாகசம் காட்டுகிறார்கள். மக்கள் உற்சாக வெள்ளத்தில் ஆர்பரிக்கிறார்கள். அருமையான அனுபவம்.

சந்தோஷிக்க ஒரு நாள்

பச்சை நிறமே பச்சை நிறமேஎன்று பாடி குதூகலிக்கலாம்... இந்த பச்சைகலர் நாளை காணாமல் போய் விடுமா . எப்படி வெளியே எடுப்பார்கள் என்ற யோசனை வராமல் இல்லை. எது எப்படியோ ஆறெல்லாம் பச்சை வண்ணமாகி சலசத்து ஓடும் காட்சி அதில் படகோட்டிகள் காட்டும் அட்டகாசம் ஆர்ப்பரிப்பு பார்க்க அவ்வளவு அழகு. இப்போ நீங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியான அந்த அழகிய காட்சிகளை இந்த வீடியோவில் கண்டுகளியுங்கள்.

- Inkpena சஹாயா

English summary
Here is an article on the beautiful event St Patrics day. This is the day when all rivers in America turn green to celebrate it and its all green here on this day. Thia is not only celebrated in America but in Canada, Ireland and many countries all over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X