For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புவிவெப்பமயமாதலே துருவப் பனிப் புயலுக்குக் காரணம்- அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புவிவெப்பமயமாதல் அதிகரித்து விட்டதே அமெரிக்காவை கடும் குளிர் தாக்கவும், துருவப் பனிப் புயல் ஏற்படவும் காரணமாகியுள்ளது என்று அமெரிக்க அரசு வர்ணித்துள்ளது.

அமெரிக்காவை ஆட்டிப்படைத்து. வரும் கடும் குளிருக்கும், உறை பனிக்கும், ஆர்க்டிக் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள துருவப் பனிப் புயலும், அதன் தாக்கமுமே காரணம் என்று விஞ்ஞானிகள் கூற ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அதையே காரணமாக கூறியுள்ளது.

global warming

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அறிவியல் ஆலோசகர் ஜான் ஹோல்டிரனும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 2 நி்மிட வீடியோ உரை ஒன்றை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், உலகம் வெப்பமயமாதலே அமெரிக்காவில் நிலவும் கடும் குளிருக்குக் காரணம். புவி வெப்பமயமாதல் அதிகரிக்கவில்லை என்று யாராவது சொன்னால் அதை நம்பாதீர்கள். அது அதிகரித்துள்ளதால்தான் இன்று துருவப் பனிப் புயல் வலிமையாகி, அதனால் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் உறைந்து போகக் காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கவில்லை என்று ஒபாமா கட்சியைச் சேர்ந்தவர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் கூறி வந்த நிலையில் ஒபாமாவின் அறிவியல் ஆலோசகரின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Obama administration is pushing back on skeptics who say the polar vortex proves climate change is a hoax. In a new video to be posted on the official White House website Wednesday, President Obama's science adviser, John Holdren, warns against buying into the idea that a cold snap disproves that the earth is getting warmer overall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X