For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ட்ரம்பின் 2005 வருமானம் 152 மில்லியன், வரி 38 மில்லியன்.. சேனல்களை முந்திய வெள்ளை மாளிகை!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): எம்எஸ்என்பிசி தொலைக்காட்சியின் ரேச்சம் மெடோஸ், அதிபர் ட்ரம்பின் 2005ம் ஆண்டு வருமானவரி படிவத்தை வெளியிடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை தானாக முன்வந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக DCReports.Org என்ற இணையதளத்தின் நிறுவனரும் நியூயார்க் டைம்ஸ்
பத்திரிக்கையின் முன்னாள் செய்தியாளருமான, டேவிட் கே ஜான்சனுக்கு ட்ரம்பின் இரண்டு பக்க 2005ம் ஆண்டு வருமான வரி படிவம் போஸ்டல் மெயிலில் வந்துள்ளது.

அதைக் குறிப்பிட்டு செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ச்சியில் வெளியிடப்போவதாக ரேச்சல் மடோ அறிவித்து இருந்தார்.

White House releases Trump's income tax details

தொலைக்காட்சி வெளியிடுவதற்கு முன்னால், வெள்ளை மாளிகையிலிருந்து அறிக்கை வந்துள்ளது. அதில் 2005ம் ஆண்டு ட்ரம்பின் வருமானம் 152 மில்லியன் என்றும் வருமான வரியாக 38 மில்லியன் கட்டியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் 103 மில்லியனுக்கு தேய்மானம் (Depreciation) கணக்கில் செலவு காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர் என்றும் சட்டப்படி தேவையான வருமான வரியைக் கட்டி வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.

மேலும் தொலைக்காட்சியில் அதிபரின் வருமான வரி விவரங்களை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது. ஊடகங்கள் அதைச் செய்தாலும், அதிபர் வருமான வரி சட்ட சீர்திருத்தத்ததை அமல்படுத்தத் தீவிரமாக உள்ளார். அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிகும் அதன் மூலம் பலன்அடைவார்கள் என்றும் வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் சட்டப்படி தான்.. ரேச்சல்

ரேச்சல் மடோ பரபரப்பான அரசியல் நிகழ்ச்சி க்கு பிரபலமானவரார். இடது சாரி சாயல் கொண்டவராக அறியப்பட்டாலும், பாரபட்சம் பார்க்காமல் அரசியல்வாதிகளை வெளுத்து வாங்குபவர் ரேச்சல்.

White House releases Trump's income tax details

இதுவரையிலும் வருமானவரி விவரங்களை வெளியிடாமல் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டவர் ட்ரம்ப் மட்டுமே.

தேர்தல் பிரச்சாரம்உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நியூயார்க் டைம்ஸ் 1995ம் ஆண்டுக்கான ட்ரம்பின் வருமான வரி விவரத்தை வெளியிட்டது. அதில் 916 மில்லியன் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெள்ளை மாளிகை அறிவிப்பிற்கு தொடர்ந்து, ரேச்சல் தனது நிகழ்ச்சியில் டேவிட் கே ஜான்சனிடம் மேலதிக விவரங்களைக் கேட்டார்.

வருமானவரி தாக்கல் செய்யப்படும் போது, முதல் இரண்டு பக்கங்களில் வருமானம், செலவுகள், வரி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அது சம்மந்தப்பட்ட விரிவான தகவல்கள் கூடுதல் பக்கங்களில் இடம் பெற்றிருக்கும்.

முதல் இரண்டு பக்கங்கள் மட்டும் டேவிட்டிற்கு சாதாரண தபாலில் அவரது வீட்டு மெயில் பாக்ஸில் டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன.

வெள்ளை மாளிகை அறிக்கையை சுட்டிக்காட்டிய ரேச்சல், அமெரிக்க அரசியல் சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தின் படி பத்திரிக்கையாளர்கள் அதிபரின் வருமான வரி விவரங்களை வெளியிடலாம், அது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்றும் கூறியுள்ளார்.

7 நாட்டு மக்களுக்குத் தடைவிதித்து ஆணை பிறப்பித்த நாள் முதலாகவே ட்ரம்ப்க்கு சோதனைக் காலமாகி வருகிறது. ஒபாமா காப்பீடு திட்டத்தை வாபஸ் பெறுவதற்காக , ட்ரம்பின் ஆசியுடன்அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மசோதாவுக்கு சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

-இர தினகர்

English summary
White House released a statement saying President Trump’s annual income was 152 million, paid income tax of 38 million US dollars, after adjusting depreciation of 130 million for the year 2005. The statement came after popular TV host Rachel Maddow announced that she is going to release Trump’s 2005 Income Tax details in Tuesday’s show. Former New York times reporter David Gay Johnson got this 2 page return in his postal mail box. White House mentioned releasing the Tax return by media is illegal and Rachel replied in the show saying 2 nd amendment has given the right to publish President’s Tax return.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X