For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது.. வெளிவரும் ஆதாரங்கள்.. உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Google Oneindia Tamil News

ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக "வெளிவரும் ஆதாரங்களை" உலக சுகாதார அமைப்பு ஒப்புகொண்டுள்ளது.

உலகம் முழுவதும் 100க்கணக்கான விஞ்ஞானிகள் குழு, காற்றின் சிறிய துகள்கள் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

WHO acknowledges ‘emerging evidence’ of airborne spread of covid-19

இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக வெளிவரும் ஆதாரங்களை" உலக சுகாதார அமைப்பு தற்போது ஒப்புகொண்டுள்ளது.

ஜெனீவாவில் நடந்த சுகாதார கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் முன்னணி மருத்துவர் பெனடெட்டா அலெக்ரான்ஸி, கொரோனா வைரஸின் "பரவும் முறைகள் குறித்த ஆதாரங்களுக்கு இது (விஞ்ஞானிகளின் ஆய்வுகள்) திறந்திருக்கும்" என்று உலக சுகாதார அமைப்பு நம்புவதாகக் கூறினார்.

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதிபிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சிறிய துளிகளின் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது என்று இந்த துளிகள் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும்போது அல்லது பேசும்போது வெளியேற்றப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி வந்தது. இந்நிலையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் காற்றில் பரவும் சிறிய துகள்கள் மக்களைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களுடன் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதினர்.

Recommended Video

    சீனாவால் உலகத்துக்கே பெரும் சேதம் - கொந்தளித்த Donald Trump

    இதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப முன்னணி மருத்துவர் பெனடெட்டா அலெக்ரான்ஸி பதில் அளிக்கையில் , கடந்த இரண்டு மாதங்களில், கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறதா என்பதை முடிந்துவரை சோதித்து வருகிறோம். ஆனால், உறுதியாகவோ, தெளிவாகவோ ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவுவதாக வெளிவரும் ஆதாரங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

    English summary
    The World Health Organization on Tuesday acknowledged “emerging evidence” of the airborne spread of the novel coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X