For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. இப்போதைக்கு முடியாது.. மிக மோசமான தாக்கம் இனிதான்.. எச்சரிக்கும் ஹு

Google Oneindia Tamil News

ஜெனீவா: கொரோனா பாதிப்பின் மிக மோசமான தாக்கம் இனிதான் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அங்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இதன் மிக மோசமான தாக்கம் இனிதான் வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவாசின் (COVAXIN).. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து.. மனித சோதனைக்கு அரசு அனுமதி! கோவாசின் (COVAXIN).. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து.. மனித சோதனைக்கு அரசு அனுமதி!

கவலை

கவலை

இதுகுறித்து அவர் கூறுகையில் தற்போதைய சூழலில் அரசுகள் சரியான கொள்கைகளை செயல்படுத்த தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும். இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலும் நிலைமையும் நம்மை கவலையடையச் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அதற்காகத்தான் உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பாடுபட வேண்டும். சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தியதால் அங்கெல்லாம் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலக கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதியானது.

தெற்காசியா

தெற்காசியா

தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் இந்த வைரஸ் பாடாய்படுத்துகிறது. வைரஸ் இன்னும் பரவ ஏராளமான இடம் உள்ளது. இத்துடன் இந்த வைரஸ் முடிந்து விட அனைவரும் விரும்புகிறோம். நாம் பழைய படி வாழ்க்கையை தொடர விரும்புகிறோம்.

Recommended Video

    Dexamethasone விலை மலிவானது..நம்ம ஊர் மருந்துக் கடைகளில் ரொம்பப் பிரபலம்
    தொற்றுநோய்

    தொற்றுநோய்

    ஆனால் உண்மையில் இது கடினம். இந்த கொரோனா வைரஸ் முடிவடையும் சூழல் அருகில் இல்லை. பல நாடுகள் கொரோனா தடுப்பு முயற்சியை முடுக்கிவிட்டால் உலகளவில் அந்த தொற்றுநோய் வேகமெடுக்கிறது. சீனாவில் வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து அறிய ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்புகிறோம் என்றார் அவர். உலக நாடுகள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவில்லை என ஐநா சபையின் தலைவர் குட்டரேஸ் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    WHO Chief Tedros Adhanom says worst of Pandemic yet to come.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X