For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெரி குட்.. மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும்.. பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு

Google Oneindia Tamil News

ஜெனீவா: கொரோனா தடுப்பூசியை இந்தியா 60 நாடுகளுடன் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் பாராட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 16ஆம் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த திருப்பம்.. கமல்ஹாசனுடன், சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்திப்புஅடுத்த திருப்பம்.. கமல்ஹாசனுடன், சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை அளித்து இந்தியா உதவி வருகிறது.

பிரதமருக்கு நன்றி

பிரதமருக்கு நன்றி

இந்தியாவைப் போல மற்ற நாடுகளும் தடுப்பூசியை வளரும் நாடுகளுக்கு அளித்த உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி.

பின்பற்ற வேண்டும்

பின்பற்ற வேண்டும்

கோவாக்ஸ் திட்டத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. நீங்கள் அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டே 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தங்கள் நாடுகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகளை தொடங்கியுள்ளனர். உங்களையே மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்" என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவாக்ஸ் திட்டம்

கோவாக்ஸ் திட்டம்

வளர்ந்த மற்றும் பவர்புல்லான நாடுகளே அனைத்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்வதாகவும் இதனால் மற்ற நாடுகளில் தேவையானவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த முடிவதில்லை என உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. இந்தப் பிரச்சனையை சரி செய்ய கோவாக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

தடுப்பூசிகளை அனுப்பி உதவும் இந்தியா

தடுப்பூசிகளை அனுப்பி உதவும் இந்தியா

இது தவிரவும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது. வங்கதேசத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள், மியான்மருக்கு 17 லட்சம் தடுப்பூசிகள், நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் எனப் பல அண்டை நாடுகளுக்கு இந்தியா இலவசமாகவே தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. அதேபோல பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்தியா வணிக முறையில் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.

English summary
WHO chief Tedros Adhanom has praised Prime Minister Narendra Modi's commitment to supporting vaccine equity and sharing COVID-19 vaccines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X