For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: அதிதீவிரமாக பரவுகிறது- புதிய, அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது என்றும் நாம் புதிய மற்றும் அபாயகரமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது:

WHO chief warns coronavirus pandemic accelerating

உலக நாடுகள் முழுவதும் ஒரேநாளில் 1,50,000 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, தென்னாசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது.

நாம் தற்போது புதியதும் அபாயகரமானதுமான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா, 20 வீரர்கள் வீரமரணம்.. என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. ராகுல் உருக்கம்கொரோனா, 20 வீரர்கள் வீரமரணம்.. என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. ராகுல் உருக்கம்

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு டெட்ரோஸ் அதனோம் கூறினார்.

English summary
The head of the World Health Organization said the coronavirus pandemic is accelerating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X