For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறியதாவது:

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, உயிரிழப்புகள் பெரும் கவலையளிக்கின்றன.

WHO Concerns over Indias Covid Situation

இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் சான்செண்ட்ரேட்டர்கள், தற்காலிக மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள், முக கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு உதவி வரும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

Exclusive: ஆக்ஸிஜன் தேவையை 'கிளவிரா' மாத்திரை குறைக்கிறது... அபெக்ஸ் நிறுவனம் அளிக்கும் நம்பிக்கை..! Exclusive: ஆக்ஸிஜன் தேவையை 'கிளவிரா' மாத்திரை குறைக்கிறது... அபெக்ஸ் நிறுவனம் அளிக்கும் நம்பிக்கை..!

கொரோனா 2-வது அலையில் நடுப்பகுதியில் இந்தியா உள்ளது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,62,317 ஆகும். நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, எகிப்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா முதல் அலையை விட 2-வது அலை மிக மோசமானதாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மிக சவாலானதாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே சரியான வழிமுறையாகும்.

இவ்வாறு டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் தெரிவித்தார்.

English summary
WHO chief Tedros Adhanom Ghebreyesus said Idia’s Coronavirus situation remains hugely concerning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X