For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பரவல் மற்றும் தோற்றம் குறித்து விசாரிக்க திட்டம்.. ஹு அதிரடி முடிவு.. சீனாவிற்கு சிக்கல்!

கொரோனா வைரசின் தோற்றம் குறித்தும் தொடக்க காலத்தில் அந்த வைரஸ் பரவல் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரசின் தோற்றம் குறித்தும் தொடக்க காலத்தில் அந்த வைரஸ் பரவல் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    India joins 62 nations to seek probe into outbreak of coronavirus

    கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பெரிய அளவில் உலகம் முழுக்க சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது, வுஹன் மார்க்கெட்டில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி உள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது.

    நானே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொள்கிறேன்.. டிரம்ப் ஷாக்கிங் பேட்டி.. எஃப்டிஏ எச்சரித்த அதே மருந்து!நானே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொள்கிறேன்.. டிரம்ப் ஷாக்கிங் பேட்டி.. எஃப்டிஏ எச்சரித்த அதே மருந்து!

    இதற்கு எதிராக அமெரிக்கா கடுமையான புகார்களை வைத்து வருகிறது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த உண்மைகளை சீனா மறைக்கிறது, தொடக்கத்தில் சீனா இதில் பொய் சொல்லிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

    உலக சுகாதார மையம் கோபம்

    உலக சுகாதார மையம் கோபம்

    இதை உலக சுகாதார மையம் கேள்வி எழுப்பவில்லை என்று கூறி அமெரிக்கா உலக சுகாதார மையத்திற்கு அளித்த நிதியை நிறுத்தி உள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பா யூனியன் சீனாவிற்கு எதிராக புகார் வைத்துள்ளது. இவர்கள் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து விசாரிக்க அவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். உலக சுகாதார மையத்தில் இருக்கும் இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. இது சீனாவிற்கு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது.

    விசாரணை செய்யப்படலாம்

    விசாரணை செய்யப்படலாம்

    இந்த நிலையில்தான் கொரோனா வைரசின் தோற்றம் குறித்தும் தொடக்க காலத்தில் அந்த வைரஸ் பரவல் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தொடக்க கால செயல்பாடு இதில் விசாரிக்கப்படும். சீனாவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    எப்போது விசாரணை

    எப்போது விசாரணை

    நேற்று நடந்த உலக சுகாதார மையம் உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படும். ஆனால் முழுக்க கொரோனா பாதிப்பு குறைய வேண்டும். அப்போதுதான் விசாரணையில் கவனம் செலுத்த முடியும் என்று உலக சுகாதார மையம் தலைமை இயக்குனர் டெட்றாஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா அழுத்தம்

    அமெரிக்கா அழுத்தம்

    இந்த விசாரணைக்கு அமெரிக்காதான் அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த பட்டியலில் நேற்று இந்தியாவும் இணைந்தது. சீனா இந்த திருப்பத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விசாரணை சீனாவை குறி வைத்து இருக்காது . சீனாவை குற்றவாளியாக சித்தரிக்காது என்கிறார்கள்.

    சுதந்திரம் இல்லை

    சுதந்திரம் இல்லை

    இந்த விசாரணை அதேபோல் பெரிய அளவில் சுதந்திரத்துடன் செய்யப்படவும் வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் உலக சுகாதார மையத்திற்கு தொடக்கத்தில் சீனா எவ்வளவு ஒத்துழைப்பு தந்தது என்பது இந்த விசாரணை மூலம் தெரிய வரும். சீனாவிற்கு இது கொஞ்சம் பின்னடைவுதான். ஆனால் அமெரிக்கா விருப்பப்பட்ட அளவிற்கு இது சீனாவிற்கு பெரிய அடி கிடையாது.

    ஜி ஜிங்பிங் என்ன சொன்னார்

    ஜி ஜிங்பிங் என்ன சொன்னார்

    அதேபோல் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க போவதாக ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் தொடக்க கால பரவல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அதற்கு சீனா முழு ஆதரவு தரும் என்று கூறி இருந்தார். அதை தொடர்ந்தே தற்போது உலக சுகாதார மையமும் கொரோனா தோற்றம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளது.

    English summary
    Finally WHO decides to investigate early response and origin of Coronavirus: A blow to China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X