For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி எல்லாத்தையும் திறந்து விட்டா... பேரழிவுதான் ஏற்படும்.. ஹூ டெட்ரஸ் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

ஜெனீவா: உலகில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வர்த்தகம் உள்பட அனைத்தையும் திறந்து விட்டு இருப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோணன் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற நிலையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையிலும் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

WHO Director General Tedros warns opening up societies too is recipe for disaster

கடந்த மார்ச் 25ஆம் தேதி பொது முடக்கத்திற்குப் பின்னர் இந்தியா அன்லாக் 4.0 என்ற பெயரில் தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது. இன்று முதல் அந்த தளர்வுகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோணன் , ''கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகள் சந்தையையும் திறந்துவிட்டுள்ளது. எந்தளவிற்கு வர்த்தகத்தை திறக்க வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டதோ அதே அக்கறையுடன் வைரசை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் இது பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது ஜேஇஇ தேர்வுகள்!கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது ஜேஇஇ தேர்வுகள்!

இவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்பதுபோல் தோன்றலாம் ஆனால், அதுவும் சாத்தியம்தான். தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வயதானவர்கள், வயதில் குறைந்தவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் இந்த நான்கு மந்திரங்களை பின்பற்ற வேண்டும். வைரஸ் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை செய்ய வேண்டும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
WHO DirectorGeneral Tedros warns opening up societies too is 'recipe for disaster'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X