For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்

Google Oneindia Tamil News

ஜெனீவா: சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அனுப்பிய விசாரணை குழு விசாரணையை முடித்துவிட்டு திரும்பியது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் கொல்லியான இந்த நோய் சீனாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கும் பரவியது.

Who finishes its probe in China about the origin of the Coronavirus

உலகம் முழுவதும் கொரோனாவால் 1.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலக நாடுகளில் 48 லட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த வைரஸை சீன வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டல் செய்திருந்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தோன்றியது எங்கிருந்து என்பதை அறிய விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த விசாரணை அறிக்கையில் சீனா வேண்டுமென்றே வைரஸை பரவியது என தெரியவந்தால் அதற்கு சீனா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து அறிய உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவை சீனாவுக்கு அனுப்பியது. அந்த குழுவினர் தங்கள் விசாரணையை முடித்து விட்டனர்.

எனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம் எனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்

இந்த நிலையில் வைரஸ் வெளியானதாக சொல்லப்படும் வுகானுக்கு பெரிய அளவிலான நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும் என ஹுவின் இயக்குநர் டெட்ரஸ் அதோனோம் தெரிவித்துள்ளார். இங்கு தொற்றுநோய் துறை ஆய்வுகளும் நடத்தப்படும் என்றார்.

Recommended Video

    இப்போதிருந்தே vaccine கொடுக்கலாம்... நிபுணர்கள் ஆலோசனை

    English summary
    WHO finishes its probe in China about the origin of the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X