For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல மாணவனான ஒசாமா பின் லேடன் தீவிரவாதியாக மாறியது எப்படி?... முதல் முறையாக மனம் திறக்கிறார் தாய்!

தீவிரவாதியாக இருந்த ஒசாமா பின் லேடன் எப்படிப்பட்டவர் என்பது குறித்து முதல் முறையாக அவரது தாய் மனம் திறந்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஆப்கானிஸ்தான்: நன்கு படித்துக் கொண்டிருந்த ஒசாமா பின் லேசன் தீவிரவாதியாக மாறியது எப்படி என்பது குறித்து முதல் முறையாக அவரது தாய் மனம் திறக்கிறார்.

ஒசாமா பின் லேசனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பை தோற்றுவித்தவர். இவர் செப்டம்பர் 11, 2001 அன்று ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்.

சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த ஒசாமா மே 1, 2011-ஆம் தேதி அமெரிக்கா ராணுவத்தினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார். அவரது உடல் மரபணு சோதனைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்ல குழந்தை

நல்ல குழந்தை

ஒசாமா குறித்து அவர் தாய் அலியா கானேம் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அப்போது அவரது 2-ஆவது கணவர் அகமது அல் அட்டாஸ், அவர்களது மகன்கள் அகமது மற்றும் ஹாசன் ஆகியோர் இருந்தவர். அவர்கள் முன்னிலையில் அலியா கூறுகையில், ஒசாமா இல்லாமல் எனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது. அவர் மிகவும் நல்ல குழந்தையாக இருந்தார். என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.

ஒசாமாவை மாற்றிவிட்டனர்

ஒசாமாவை மாற்றிவிட்டனர்

என் கணவர் அல் அட்டாஸ் 3-ஆவது வயதில் இருந்து ஒசாமாவை வளர்த்து வந்தார். அவர் நல்ல மனிதர். ஒசாமாவுக்கு நல்லவராகவே இருந்தார். எனது மூத்த மகனான ஒசாமா மிகவும் கூச்ச சுபாவமாக இருந்தவர். அவர் படிப்பில் கெட்டியாக இருந்தார். 20 வயதில் கிங் அப்துல் ஆஜிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அவரை தீவிரவாதியாக மாற்றினார். பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் ஒசாமாவை முற்றிலும் மாற்றிவிட்டனர்.

மரியாதை

மரியாதை

பல்கலைக்கழகத்தில் சிலரை பார்க்கும் வரை ஒசாமா நல்ல பையனாக இருந்தார். எப்போதும் அவர்களை பார்த்தாரோ அப்போதே ஒசாமா மூளைச்சலவை செய்யப்பட்டார். இதையெல்லாம் இவர்கள் பணத்திற்காக செய்துள்ளனர். இவர்களிடமிருந்து எப்போதும் விலகியே இரு என்று நான் கூறியும் அதை ஒசாமா கேட்டதில்லை. ரஷ்யாவின் செயலை கண்டித்து ஆப்கானுக்கு ஒசாமா கடந்த 1980-இல் பயணம் செய்தார். அப்போது அவரால் அனைவரும் பெருமையடைந்தனர். சவூதி அரசும் ஒசாமாவை மிகவும் மரியாதையாக நடத்தியது.

தாக்குதல்

தாக்குதல்

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய அமெரிக்கா நாடுகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதாக நியூயார்க்கிலிருந்து செய்திகள் வந்தன. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறு வயது முதல் எங்களுக்கு ஒசாமா பற்றி தெரிந்திருந்தபோது அவரது அப்போதைய செயல் குறித்து வெட்கப்பட்டோம் என்று தெரிவித்தார்.

English summary
Osama Bin laden's mother Alia Ghanem says about his son Osama for the first time. He was good in academic and interested to go to school, says mother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X