For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோலை ரோஜாக்கள், 6000 ஏக்கர் நிலம், 7 டேம்கள்- மன்சுகுல் படேல் யார்?மண்டை காயும் கென்யா ஊடகங்கள்

கென்யாவில் 41 பேரை பலி கொண்ட சோலை நகர் அணையின் உரிமையாளர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்சுகுல் படேல்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஊருக்குள் வந்த தண்ணீர்.. கென்யாவில் 41 பேர் பலி-வீடியோ

    சோலை: கென்யாவில் 41 பேரை பலி கொண்ட சோலை நகர் அணையின் உரிமையாளரான மன்சுகுல் படேல் குறித்து கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லையே என புலம்புகின்றன கென்யா ஊடகங்கள்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்சுகுல் படேல் கென்யாவின் சோலை நகரப் பகுதியில் மொத்தம் 6,000 ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளர். சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு 'சோலை ரோஜாக்கள்' என்ற பெயரில் ஏற்றுமதி செய்கிறார்.

    Who is Patel Mansukul?

    அதேபோல் பிரமாண்ட மாட்டு பண்ணைகள் அமைத்து பால் உற்பத்தி தொழிலும் மன்சுகுல் படேல் ஈடுபட்டு வருகிறார். 6,000 ஏக்கர் பரப்பளவில் சிறியதும் பெரியதுமாக 7 அணைகளை படேல் கட்டியிருக்கிறார்.

    இதில் 2015-ம் ஆண்டு ஒரு அணை இதேபோல் வெடித்து உடைந்தது. ஆனால் அதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. தற்போதைய அணையையும் சரிவர பராமரிக்காததாலேயே இத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கென்யா அரசு அறிவித்துள்ளது.

    English summary
    The dam that collapsed in Kenya is owned by Patel Mansukul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X