For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எபோலா நோய் தீவிரம் – இரண்டே நாளில் 56 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 56 பேராக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி. எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

WHO reports new Ebola cases in West Africa

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவரும் என மொத்தம் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் எபோலாவினால் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

மேலும், மேற்கு ஆப்ரிக்காவில் இந்நோய்க்கு மேலும் 128 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The World Health Organisation reported 128 new Ebola cases and 56 deaths in West Africa in the two days to 11 August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X