For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேகமாக பரவாது, ஆனால் தடுப்பூசி வேலை செய்யாது... தென் ஆப்பிரிக்க வகை கொரோனா குறித்த பகீர் தகவல்கள்

Google Oneindia Tamil News

ஜெனிவா: பிரிட்டன் கொரோனா வகையைவிடத் தென் ஆப்பிரிக்க கொரோனா வகை வேகமாகப் பரவாது என்றாலும்கூட தடுப்பூசிகள் இவற்றுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தினசரி சராசரியாக 50 ஆரியத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் படிப்படியாக ஒவ்வொரு நாடுகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது.

 புயலாகப் பரவும் உருமாறிய பிரிட்டன் கொரோனா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை புயலாகப் பரவும் உருமாறிய பிரிட்டன் கொரோனா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

 உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் நாட்டில் கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா அதிக ஆபத்தானது இல்லை என்றாலும் மற்ற வகைகளைவிட 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை இந்த வகை கொரோனா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 தென் ஆப்பிரிக்க வகை

தென் ஆப்பிரிக்க வகை

இதே காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவும் இந்த வகை கொரோனா, இதுவரை ஐந்து நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்குப் பிறகு உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கு உருமாறிய கொரோனா வகைகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 தென் ஆப்பிரிக்க வகை ஆபத்தானதா

தென் ஆப்பிரிக்க வகை ஆபத்தானதா

இந்நிலையில், பிரிட்டன் வகை கொரோனாவா காட்டிலும் தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வேகமாகப் பரவக் கூடியது என்று தகவல்கள் பரவ தொடங்கின. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பிரிட்டன் வகையைவிட அதிக அளவில் பரவக்கூடியது என்பதற்கான அறிகுறி தற்போது வரை எதுவும் கண்டறியப்படவில்லை" என்றார்.

 பிரிட்டனில் மோசமாகவும் வைரஸ் பரவல்

பிரிட்டனில் மோசமாகவும் வைரஸ் பரவல்

பிரிட்டன் நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து மோசமாகி வருகிறது. கடந்த ஏழு நாட்களாக திசனரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் காரணமாகப் பிரிட்டனில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனால் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வர இருந்த போரிஸ் ஜான்சனின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 தடுப்பூசி வேலை செய்யாது

தடுப்பூசி வேலை செய்யாது

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, தேசிய கொரோனா வைரஸ் கட்டளை கவுன்சிலை கூட்டி, அதிகரித்து வரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார். தென் ஆப்பிரிக்க கொரோனா வகையில் அதிகளவில் புரத மாற்றங்கள் உள்ளதாகவும் இதனால் தடுப்பூசிகள் தென் ஆப்பிரிக்க கொரோனா வகைகளுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 6.82 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.68 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும்.74 லட்சத்தைக் கடந்துள்ளது.

English summary
The World Health Organisation has said there is no indication that the coronavirus variant in South Africa is more transmissible than the one found in Britain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X