For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைவலி..! நீண்டகால கொரோனா.. 9 மாதங்கள், 200 வகையான பாதிப்புகள்.. ஷாக்கை தரும் WHO ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

ஜெனீவா: கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் ஏற்படும் நீண்டகால கொரோனா பாதிப்பு (Long Covid) 9 மாதங்களுக்கு மேலாகவும் தொடர்வதாகவும் இதனால் 200க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை பெரும் பாடுபடுத்தி வருவது கொரோனா தான். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பால், பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்

மற்ற நோய்களுடன் ஒப்பிடும்போது இது ஒப்பீட்டளவில் புதிய நோய் என்பதால், கொரோனா குறித்த ஆய்வுகள் உலக நாடுகளில் தொடர்ந்து வருகின்றன.

நீண்டகால கொரோனா

நீண்டகால கொரோனா

இந்தச் சூழலில் நீண்டகால கொரோனா புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. அதாவது ஒருவர் கொரோனாவில் இருந்த குணமடைந்த பின்னரும் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை நீண்டகால கொரோனா (Long Covid) என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னரே கூறியது போல இது ஒப்பட்ளவில் புதியதொரு வைரஸ் என்பதால் இதனால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்துத் தெளிவான மற்றும் உறுதியான தகவல்கள் இல்லை.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் உடல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருபவர்கள் உடனடியாக மருத்துவ உதவிகளை நாடுங்கள், ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும் எத்தனை காலம் வரை இதுபோன்ற பாதிப்புகள் தொடரும் எனத் தெரியவில்லை. இது குறித்த ஆய்வுகளை நடைபெற்று வருகிறது.

post-Covid syndrome

post-Covid syndrome

இது வெகு சிலருக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினை இல்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்த பலருக்கும் இதுபோல நீண்டகால உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. இது உண்மையான ஒரு பிரச்சினை. கொரோனாவால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது. post-Covid syndrome எனப்படும் இது, என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விரிவான ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு நடத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர் ஆய்வு

தொடர் ஆய்வு

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியான கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது, இது பற்றிப் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நேரடியாகவும் கருத்துகள் கேட்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும் மூச்சுத் திணறல், தீவிர சோர்வு, இருதய மற்றும் நரம்பியல் கோளாறுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாகவும் இருப்பினும் இவை எதனால் ஏற்படுகின்றன என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Recommended Video

    WHO குழு Wuhan Lab-ஐ ஆய்வு செய்யும் முன்னால US-ன் Fort Detrick Lab-ல் ஆய்வு செய்ய வேண்டும் - China
    200 வகையான பாதிப்புகள்

    200 வகையான பாதிப்புகள்

    இது பற்றி உலக சுகாதார அமைப்பினர் அவசரக்கால திட்டத்தின் தலைவர் ஜேனட் டயஸ் கூறுகையில், "கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மார்பு வலி, சொறி உட்பட 200 வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு குறிப்பிட்ட இந்த காலத்தில் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பது நம்மால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

    9 மாதங்கள்

    9 மாதங்கள்

    சிலருக்கு மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இதுபோன்ற பாதிப்புகள் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்த 9 மாதங்களைக் கடந்த பிறகும் உடல்நிலை பாதிப்பு தொடர்கிறது. இது உண்மையிலேயே கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வுகள் இப்போது தான் நடைபெற்று வருகிறது. எனவே உடல்நிலை பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க பொதுமக்கள் முடிந்தவரை வேக்சின்களை விரைவாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    English summary
    WHO said it was deeply concerned by the unknown numbers who may still be suffering with Long Covid. There had been more than 200 reported symptoms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X