For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரெக்ஸிட் வாக்கெடுப்பு எதிரொலி... பிரிட்டனின் அடுத்த பிரதமர் போரீஸ் ஜான்சன் ?

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளதால், அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

 Who will be Britain's next Prime Minister ?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 52% பேரும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க 48% பேரும் ஆதரவு தெரிவித்தனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் எதிர்தரப்பினர் டேவிட் கேமரூன் பதவி விலகவேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இவ்வாக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தாம் பிரதமர் பதவியில் இருந்து அக்டோபர் மாதம் விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘மக்களின் கருத்தாக எதிரொலித்த விலகல் முடிவு செயலளவிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

நமது நாடு என்னும் கப்பலை எதிர்காலத்தின் அடுத்தபடியை நோக்கி அழைத்துச் செல்லும் மாலுமியாக நான் நீடிப்பது சரியாக இருக்காது என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன். எனவே வரும் அக்டோபர் மாதம் இந்த நாட்டின் புதிய பிரதமராக வேறொருவர் பதவி ஏற்றுக் கொள்வார்' என கண்கலங்கிய நிலையில் கேமரூன் அறிவித்தார்.

டேவிட் கேமரூனின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் கேமரூரின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் 3 பெண்கள், 3 ஆண்கள். இந்த போட்டியில் லண்டன் முன்னாள் மேயர் போரீஸ் ஜான்சன் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு அவர் ஆதரவாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெரசா மே, ஜார்ஜ் ஆஸ்போர்ன், மைக்கேல் கோவ், நிக்கி மோர்கன், ஆந்திரேயாலீட்சம் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

English summary
Boris Johnson Could Be Britain’s Next Prime Minister ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X