For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொத்தமாக மூடப்பட்ட வுஹன் நகரம்.. உயரும் பலி எண்ணிக்கை.. சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    பெய்ஜிங்: சீனாவில் கோரோனா வைரஸ் காரணமாக வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கோரோனா வைரஸ் தற்போது சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். 850 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வருகிறது. அருகில் உள்ள சில நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா

    மூடப்பட்டது

    மூடப்பட்டது

    இந்த கோரோனா வைரஸ் காரணமாக வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு பரவும். இது விலங்குகளிடம் இருந்தும் கூட இன்னொருவருக்கு பரவும், அதனால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகும். இதனால் அந்த நகரத்தை தற்போது மூடி உள்ளனர்.அங்கிருந்து மக்கள் வெளியேறவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எப்படி என்று தெரியவில்லை

    எப்படி என்று தெரியவில்லை

    இதன் பரவலை எப்படி தடுப்பது என்றும் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. சீனாவில் தற்போது அறிவிக்கப்படாத மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழுமையான தீர்வு காணும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது மிக சாதாரண அறிகுறிகளை கொண்டு இருப்பதால், சாதாரண காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டவர்களுக்கும் வேறுபாடு காண்பது கடினம் ஆகியுள்ளது.

    அண்டை நாடுகள் பரவும்

    அண்டை நாடுகள் பரவும்

    தற்போது இந்த கோரோனா வைரஸ் தாக்குதல் அண்டை நாடுகளுக்கும் தாக்க தொடங்கி உள்ளது. ஹாங்காங்கில் ஏற்கனவே 10 பேர் கோரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். பிரிட்டனில் இரண்டு பேர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். சீனாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவருக்கு கோரோனா வைரஸ் தாக்கி உள்ளது. ஜப்பானிலும் இருவருக்கு இந்த கோரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    முகத்தை மூடி

    முகத்தை மூடி

    இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ள மக்களை மிக இறுக்கமாக மூடிய பைகளில் அடைத்து வைத்துள்ளனர். இதை பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. காற்று செல்லாத பைகளில், ஆக்சிஜன் டியூப் மூலம் நோயாளிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், கோரோனா வைரஸ் தாக்குகிறது. இதை தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Whole Wuhan city closed: China's Coronavirus kills 26 people, 850 got affected in the city.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X