For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாலிவுட்டில் வேகமாக பரவும் கக்குவான் இருமல்: அம்மையும் கூட

By Siva
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் உள்ள குழந்தைகள் பலருக்கு கக்குவான் இருமல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் அப்பகுதியில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கக்குவான் இருமல் வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாலிவுட் பகுதியில் பல குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி குழந்தைகள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களை நோய் தாக்குவதுடன் அது பிறருக்கும் பரவ வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறியும் பெற்றோர்கள் கேட்கவில்லை.

கலிபோர்னியா

கலிபோர்னியா

கலிபோர்னியாவில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டு இடைவிடாது இருமிக் கொண்டிருக்கின்றனர்.

கக்குவான் இருமல்

கக்குவான் இருமல்

இந்த ஆண்டு துவங்கி கடந்த 2ம் தேதி வரை மட்டும் சுமார் 8 ஆயிரம் கக்குவான் இருமல் நோயாளிகள் குறித்து கலிபோர்னியா மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில் 267 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 58 பேரும் அடக்கம்.

குழந்தைகள்

குழந்தைகள்

கக்குவான் இருமல் பெரியவர்களுக்கும் வரும் என்றாலும் கலிபோர்னியாவில் குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிறந்து 2 மாதங்கள் கூட ஆகாத 3 பச்சிளம் குழந்தைகள் கக்குவான் இருமலால் இறந்துள்ளனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

கடந்த 1950ம் ஆண்டில் கக்குவான் இருமலுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவில் பலியாகினர். அதன் பிறகு தடுப்பூசிகளால் பாதிப்பு குறைக்கப்பட்டது. தற்போது பலர் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பதால் அந்த நோய் வேகமாக பரவி வருகிறது.

அம்மை

அம்மை

கக்குவான் இருமல் தவிர அம்மை நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அம்மை நோய் பலருக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் கலிபோர்னியாவில் தான் அதிகம் பேருக்கு அம்மை போட்டுள்ளது. காரணம் அவர்கள் தடுப்பூசி போடாதது தான்.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் அலர்ஜி வரும், ஆஸ்துமா ஏற்படும் என்று சாக்குபோக்கு கூறி குழந்தைகளை பள்ளிகளில் இருந்து பெற்றோர்கள் அழைத்துச் சென்றுவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Whooping cough is spreading like wildfire in Los Angeles. Parents of kids in popular Hollywood schools don't allow their kids to get vaccination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X