For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

By BBC News தமிழ்
|

75 வயதான பிரெண்டா விட்டில்க்கு அல்சைமர் நோய் இருப்பது கடந்த 2015ம் ஆண்டு தெரியவந்தது.

ஆனால் இப்போதும் அவர் ஜிக்ஸா எனப்படும் அட்டையை கலைத்துப்போட்டு விளையாடும் விளையாட்டு, தையல், நடனம் என உற்சாகமாக பொழுதை கழிக்கிறார். அல்சைமர் ஆராய்ச்சியில் இவரும் பங்கேற்று வருகிறார்.

நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோய் உள்ளிட்ட டிமென்ஷியா எனப்படும் மனச்சிதைவு பிரச்னைகளுடன் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான நபர்களில் ஒருவர்தான் இந்த பிரெண்டா விட்டில்.

ஐந்து கோடி என்ற எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து வருகிறது என்ற செய்தி மிகவும் கவலை தருவதாக உள்ளது.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

2030ம் ஆண்டில் உலகெங்கும் டிமென்ஷியாவுடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரை கோடியாக உயரும் என்றும் 2050ல் 13 கோடியே 15 லட்சமாக உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டிமென்ஷியா அதிகம் பாதிப்பது பெண்களையே... ஆஸ்திரேலியாவில் டிமென்ஷியா தொடர்பான பிரச்னைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

அமெரிக்காவில் டிமென்ஷியா பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களை விட டிமென்ஷியாவே அதிகம் பெண்களை பாதித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க பெண்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலி வாங்கும் நோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயை பின்னுக்கு தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்கு காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது.

இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார் அன்டோநெல்லா சன்டுகின்சாதா.

இவர் ஸ்விட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர்.

அல்சைமரில் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் வாழ்நாளே அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே டிமென்ஷியா வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கிய காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பரப்புரைகளே இதற்கு காரணம்.

இவ்விரண்டுமே அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாகும். பெண்களிடையே மன அழுத்த பிரச்னை இருக்கும் நிலையில் இது அல்சைமருக்கு வழிவகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் அல்சைமருக்கு பிற்காலத்தில் காரணமாகின்றன.

சமூக ரீதியான பொறுப்புகள் காரணிகளும் டிமென்ஷியாவுக்கான வாய்ப்புகளை அதிகமாக்குகின்றன.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் டிமென்ஷியாவுக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.

அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60-70% பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது போன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா ஃபெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர்.

இந்த யோசனை வேகமாக செயல் வடிவம் பெற்றுவருகிறது.

பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்திற்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஒரு அமைப்பு அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன் பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

சான்டுகின் சாதா, ஃபெர்ரட்டி, ஷூமாக்கர், கவுதம் மைத்ரா ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

அல்சைமருடன் உள்ள ஆண், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாக கூறுகின்றது என்கின்றனர் ஆலோசனை குழுவினர்.

இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் ஃபெர்ரட்டி.

மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களை கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்த புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.

ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரியவருகிறது.

எனவே, ஆண் மற்றும் பெண்களில் பயோ மார்க்கர் எனப்படும் புரதம் வெவ்வேறான அனுமான மதிப்பை கொண்டுள்ளதாக கூறுகிறார் ஃபெர்ரட்டி.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

ஆண்களை விட பெண்களில் இந்நோயை கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்க காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.

பெண்களின் மூளையை ஒரு குறிப்பிட்ட வயது வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பாதுகாப்பதாகவும் வயதான பின் இந்த பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் இதுவே அத்தரப்பினருக்கு நோயின் தீவிரம் வேகமாக அதிகரிக்க காரணம் என ஒரு ஊகம் உள்ளது.

அல்சைமருக்கு மருந்துகளுக்கான மருத்துவ சோதனைகளை திட்டமிடுவது எப்படி என்று மற்றுமொரு சவாலும் உள்ளது.

மன அழுத்தம், விழி வெண்படலம் போன்ற சூழல்களில் அல்சைமரின் வெளிப்பாடு நன்றாகவே தெரிவதாக கூறுகிறார் சான்டுகின் சாதா.



அதிகபடியான பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் அதிகம் பேரை இதற்கான பரிசோதனைகளில் சேர்ப்பது அவசியம் என்கிறார் சாதா. இது நல்ல பலனை தருவதாகவும், பயன் தரும் மருந்துகளை உருவாக்க இது உதவுவதாகவும் கூறுகிறார் சாதா.

கடந்த பத்தாண்டுகளில் அல்சைமருக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான பெரும்பாலான சோதனைகள் தோல்வியை தழுவியுள்ளன.

மற்ற நோய்களை போலவே டிமென்ஷியாவுக்கான ஆராய்ச்சிகளுக்கும் குறைவாகவே நிதி உதவி கிடைக்கிறது. நோய்களுக்கான ஆராய்ச்சிகளுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு 10 பவுண்டிலும் 8 பென்னி மட்டுமே டிமென்ஷியாவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
Getty Images
அல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?

ஆனால் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு 1.08 பவுண்டு செலவழிக்கப்படுகிறது என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு. அமெரிக்காவிலும் இதே நிலைதான்.

அல்சைமர் தொடர்பான ஆய்வுகளுக்கு 303 கோடி டாலர்களும் புற்றுநோய் ஆய்வுகளுக்கு 987 கோடி டாலர்களும் ஒதுக்கப்படுவதாக கூறுகிறது தேசிய ஆரோக்கிய மையம். அண்மைக்காலமாக வெளியிலிருந்து அதிகளவில் நிதியுதவி கிடைப்பதாக கூறப்படுகிறது. பில் கேட்ஸ் 5 கோடி டாலர் அளித்துள்ளார்.

ஆனால், இன்னும் அதிக உதவிகள் தேவைப்படுவதாக கூறுகிறார் அல்சைமர் ரிசர்ச் யுகே -வின் தலைமை அதிகாரி ஹிலாரி ஈவான்ஸ்.

இதன் மூலம் புற்றுநோய், இதய நோய் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு இணையான முன்னேற்றங்களை காண முடியும் என்கிறார் அவர்.

அல்சைமருக்கு ஆளான பிரெண்டா ஜிபிஎஸ் வசதி மூலம் பலன் பெற்று வருகிறார். ஒரு முறை தவறான ரயிலில் ஏறி பயணித்தது இதில் தெரிய வந்தது. இந்நிலையில் அல்சைமருக்கான ஆய்வில் ஒத்துழைக்க பிரெண்டாவும் அவரது கணவரும் உறுதியளித்துள்ளனர்.

இதுபோன்றவர்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. பாலின அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அல்சைமரை கண்டுபிடிக்கவும் சிகிச்சை தரவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் புதிய வழிகளை கண்டறிய வெகுவாக பயன்படுகிறது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Diagnosed with Alzheimer’s in 2015, 75-year-old Brenda Whittle still enjoys jigsaws, sewing and dancing. New activities are less appealing, but participating in Alzheimer’s research and drug trials is an exception. She’s so at ease with loud brain scans, she even falls asleep during them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X