For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நோ சான்ஸ்.." என்ன நடந்தாலும் அதுக்கு வாய்ப்பில்லை.. ஜி ஜின்பிங் பிடிவாதம்! கொதித்தெழும் சீன மக்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகமே இப்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட நிலையில், சீனாவில் மட்டும் மக்கள் திடீரென எழுந்துள்ள போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருந்தாலும், எப்போதும் அதற்கு நேர்மாறாக தான் சீனா இயங்கும். கொரோனா விஷயத்திலும் கூட இதற்கு எந்தவொரு விதிவிலக்கும் இல்லை.

உலகையே இரண்டு ஆண்டுகளாக முடக்கிப் போட்ட கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தான் முதலில் பரவியது. அது வௌவாலில் இருந்து வந்ததா இல்லை வூஹான் லேப்பில் இருந்து பரவியதா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை.

குவிக்கப்படும் சீன ராணுவம்! இலங்கை எல்லையில் என்ன நடக்கிறது? நிலைமையை விளக்கிய டக்ளஸ் தேவானந்தாகுவிக்கப்படும் சீன ராணுவம்! இலங்கை எல்லையில் என்ன நடக்கிறது? நிலைமையை விளக்கிய டக்ளஸ் தேவானந்தா

சீனா

சீனா

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட கொரோனா பரவ தொடங்கிய காலகட்டத்தில் சீனா இதை வெற்றிகரமாகக் கையாண்டது. உலகமே லாக்டவுனில் முடங்கி இருந்த நிலையில், சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தனர். இப்போது உலகமே கொரோனாவுடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா மட்டும் இன்னும் ஜீரோ கோவிட் திட்டத்தில் மிகவும் உறுதியாக உள்ளது. இதனால் அங்கு மக்கள் மிகக் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இது போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.

அதிபரான ஜி ஜின்பிங்

அதிபரான ஜி ஜின்பிங்

கடந்த மாதம் சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்வானார். அப்போதே அவர் மீது மக்களிடையே அதிருப்தி அதிகமாக இருந்தது. ஜி ஜின்பிங் எதிராகப் பேனர்கள் வைக்கப்பட்டு, பெய்ஜிங்கில் மக்கள் போராட்டமே நடந்தது. சீனாவைப் போன்ற கம்யூனிஸ்ட் நாட்டில் மக்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக அதிபராகியுள்ள ஜி ஜின்பிங் மீது சீன மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாக இருந்தது.

போராட்டம்

போராட்டம்

இதற்கிடையே சில வாரங்களில் இப்போது மீண்டும் அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காரணம் ஜி ஜின்பிங்கின் பிடிவாதம். உலகமே கொரோனா உடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டாலும் கூட, ஜி ஜின்பிங் ஜீரோ கோவிட் கொள்கையை உறுதியாக உள்ளார். இதனால், 3 ஆண்டுகளுக்குப் பின் இன்னும் கூட லாக்டவுன் மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜீரோ கோவிட்

ஜீரோ கோவிட்

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிலும் கொரோனா அலைகளின் சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடும் போது ரொம்பவே குறைவு. இருந்தாலும், ஜீரோ கோவிட் கொள்கையால் அப்படியே ஊரடங்கால் சீன நகரங்கள் முடங்கி உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும் சீன மக்கள், கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இது மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.

கொரோனா ரூல்ஸ்

கொரோனா ரூல்ஸ்

அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் அங்குள்ள உரும்கி நகரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் தீயை அணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஒரு நகரில் நடந்த ஒரு சம்பவம் மட்டுமே. இதுபோல சீனாவில் பல இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலரும் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதை எல்லாம் கண்டு தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், அந்நாட்டின் பொருளாதாரமும் இப்போது இக்கட்டான சூழலில் இருக்கிறது. உலகில் மிகப் பெரிய பொருளாதாரங்களில் சீன பொருளாதாரம் இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகக் கடந்த அக்டோபரில் மோசமான மந்தநிலையைச் சந்தித்தது.. குறிப்பாகத் தொழிற்சாலை உற்பத்தி எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது. அதேபோல ஐந்து மாதங்களில் முதல் முறையாகச் சில்லறை விற்பனை சரிந்துள்ளது.

போராட்டம்

போராட்டம்

இது சீன மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகிறது. ஜீரோ கோவிட் ரூல்ஸ் காரணமாகப் போடப்படும் கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம். ஒருவருக்கு கொரோனா வந்தாலே, இப்போதும் ஒட்டுமொத்த ஊருக்கே லாக்டவுன் போடப்படுகிறது. இதனால் பொருளாதாரம் பாதித்து பொருளாதாரம் சரிவடைகிறது. இதைக் கண்டித்தே இப்போது சீன மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போலீசார் போராட்டத்தை ஒடுக்க எடுக்கும் நடவடிக்கைகளையும் தாண்டி கூட இந்த போராட்டம் தொடர்கிறது.

பிடிவாதம்

பிடிவாதம்

இது ஜி ஜின்பிங் அரசுக்கு அழுத்தம் தருவதாகவே உள்ளது. இருந்த போதிலும், அவர் தனது ஜீரோ கோவிட் திட்டம் தான் சரியானது என்பதை உலகிற்குக் காட்ட விரும்புகிறார். இதன் காரணமாகவே என்ன ஆனாலும், ஜீரோ கோவிட் திட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என்பதில் ஜி ஜின்பிங் உறுதியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பின், அவரே தன்னை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இது அவர் என்ன நடந்தாலும் ஜீரோ கோவிட் ரூல்ஸை கைவிடும் எண்ணத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது பிடிவாதம் சீன மக்களை இக்கட்டான சூழலுக்குத் தள்ளுகிறது.

English summary
Reason behind sudden people protest across Chinese cities: China Coronavirus lockdown leading to massive protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X