For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிற்கு ஷாக்.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன?

காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய விசாரணையாக நடத்த உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    UN on Kashmir issue | காஷ்மீர் பிரச்சனையில் ஐநாவின் ரகசிய ஆலோசனை

    பெய்ஜிங்: காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய விசாரணையாக நடத்த உள்ளது. இந்தியாவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.

    இந்த கோரிக்கையை தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவே தற்போது சீனாவிற்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது.

    வித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி! வித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி!

    பொதுவாக எப்படி

    பொதுவாக எப்படி

    பொதுவாக உலக பிரச்சனைகளை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இரண்டு வகையாக விசாரிக்கும். ஒன்று திறந்த விசாரணை (Open Consultations). இன்னொரு விசாரணை ரகசிய விசாரணை (Closed Consultations). இந்த இரண்டும் ஐநாவின் அதிகாரபூர்வ விசாரணைதான். இரண்டுமே அதிகாரபூர்வமானதாகவே கருதப்படும்.

    எப்படி மாற்றம்

    எப்படி மாற்றம்

    பிரச்சனைகளை பொறுத்தே இந்த விசாரணை முறை மாறுபடும். உதாரணமாக சிரியா பிரச்சனை மற்றும் அங்கு நடந்து போர் குறித்து திறந்த விசாரணை நடந்தது. சிரியா பெரிய நாடு கிடையாது என்பதால் அப்படி திறந்த விசாரணை செய்தனர். அதே சமயம் பெரிய நாடு ஒன்று செய்யும் தவறு அல்லது பிரச்சனைக்கு எதிராக ரகசிய விசாரணை நடத்தப்படும்.

    எதுவும் தெரியாது

    எதுவும் தெரியாது

    அந்த வகையில் தற்போது காஷ்மீர் பிரச்சனையை ஐநா இன்று ரகசியமாக விசாரிக்க உள்ளது. இந்தியா பெரிய நாடு என்பதால் இப்படி செய்யப்பட உள்ளது. இதில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று விஷயம் அவர்கள் சொல்லாமல் மக்களுக்கு வெளியே தெரியாது. அதேபோல் சீனாவே இந்தியாவிற்கு எதிராக இந்த விசாரணை முறையை கேட்டு பெற்றுள்ளது.

    திட்டம்

    திட்டம்

    இதன் மூலம் சீனா இந்தியாவிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேச முடியும். இந்தியாவிற்கு எதிராக பெரிய நாடுகளை சீனா ஒன்று சேர்க்க இந்த ஆலோசனை வசதியாக இருக்கும். காஷ்மீர் பிரச்சனையின் மூலம் சீனா இந்தியாவிற்கு பெரிய அளவில் செக் வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    English summary
    Why did China ask for a close consultation in the UN Security Council on Jammu Kashmir Issue?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X