For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? அறிவியல் சொல்வது என்ன?

By BBC News தமிழ்
|

நீண்ட கால வறண்ட காலநிலைக்கு பிறகு மழை பெய்தால் நிலத்திலிருந்து ஒரு வாசம் வருமல்லவா ? அது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

இலையில் நீர் துளிகள்
Science Photo Library
இலையில் நீர் துளிகள்

உண்மையில் மழைவாசத்துக்கு பின்னணியில் அறிவியலும் இருக்கிறது.

இடியுடன் கூடிய மழை பெய்தபிறகு சுத்தமான காற்றும் ஈரமான நிலத்திலிருந்து ஒரு நல்ல வாசம் வருவதற்கு காரணமாக பாக்டீரியா, செடிகள் மற்றும் மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது.

பெட்ரிகோர் என அறியப்படும் அந்த வாசனை குறித்து அறிவியல் அறிஞர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்துவருகிறார்கள். வாசனை திரவியம் தயாரிப்பவர்களும் மழை வாசம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

ஈரமான பூமி

மழை வறண்ட நிலத்தை அடைந்தவுடன் வரும் வாசனைக்கு காரணமானது ஒரு வகை பாக்டீரியாக்கள். இவை நிலத்தில் அபரிவிதமாக இருக்கின்றன என விவரிக்கிறார் ஜான் இன்நெஸ் மையத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியியல் துறை தலைவரும் பேராசிரியருமான மார்க் பட்னர்.

''ஆகவே நீங்கள் ஈரமான மண் வாசனையை நுகர்வதாக கூறுகிறீர்கள் எனில் உண்மையில் நீங்கள் ஒரு வகை பாக்டீரியாவிலிருந்து வரும் மூலக்கூறுகளை நுகர்கிறீர்கள் என அர்த்தம்'' என பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

ஜியோஸ்மின் எனும் அந்த மூலக்கூறு ஸ்ட்ரெப்டோமைசெஸால் உருவாகிறது. பெரும்பாலும் நல்ல ஆரோக்கியமான மண்ணில் இந்த பாக்டீரியா இருக்கிறது. இப்பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்கவும் உதவுகிறது.

தண்ணீர் துளிகள் மண்ணை அடையும்போது ஜியோஸ்மின் காற்றில் வெளியிடப்படுகிறது. மழை பெய்ததற்கு பிறகு இவை ஏராளமாக வெளிவருகிறது. ஜியோஸ்மின் தற்போது பரவலாக வாசனை திரவிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நீர் துளிகள்
Science Photo Library
நீர் துளிகள்

''இது மிகவும் ஆற்றல்மிக்க மூலப்பொருளாக இருக்கிறது. இதனை மிகவும் நீர்த்துபோகச் செய்தாலும் உங்களால் எளிதாக அந்த வாசனையை கண்டுபிடித்து விட முடியும். ஜியோஸ்மினுக்கும் மனிதர்களுக்கும் ஒரு வித்தியாசமான தொடர்பு இருக்கிறது. இந்த மூலப்பொருளின் வாசனை மற்றும் சுவை பலருக்கும் பிடிக்காது'' என்கிறார் வாசனை திரவியம் தயாரிக்கும் மரினா பார்சினில்லா.

''இது மனிதர்களுக்கு நச்சானது அல்ல எனினும் இதன் மீச்சிறு பகுதியை மனிதர்கள் சுவைக்க முகர நேர்ந்தாலும் அவர்கள் மிகவும் அசௌகரியமாக்கும். ஏன் மனிதர்களுக்கு ஜியோஸ்மின் பிடிப்பதில்லை என்பது எங்களுக்கு தெரியவில்லை'' என்கிறார் டென்மார்க் ஆல்போர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெப்பே லுண்ட் நீல்சன்.

பெட்ரிகோர் :

இந்த பதத்தினை ஜாய் பியர் மற்றும் ரிச்சர்டு தாமஸ் என்ற ஆராய்ச்சியாளர்கள் 1964-ல் அவர்கள் வெளியிட்ட அர்கில்லெசியஸ் வாடையின் இயல்பு எனும் கட்டுரையில் பயன்படுத்தினர். இந்த கட்டுரை நேச்சர் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

நீர் துளிகள்
Science Photo Library
நீர் துளிகள்

தாவரங்கள்:

பேராசிரியர் நீல்சன் கருத்துப்படி, ஜியோஸ்மின் டெர்பீன்ஸ் உடன் தொடர்புடையது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. டெர்பீன்ஸ் என்பது பல தாவரங்களின் வாசனைக்கு மூலாதாரமாக இருக்கிறது.

லண்டனின் கீவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா ஆராய்ச்சி தலைவரான பேராசிரியர் பிலிப் ஸ்டீவன்சன், ''மழையால் இந்த வாசனைகளை வெளியே கொண்டு வர முடியும் '' என்கிறார்.

''தாவர இலை முடியில் இந்த தாவர ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை பெய்யும்போது சேதப்படுத்தப்பட்டு அந்த தாவர ரசாயனங்களின் கூட்டு பொருள்கள் வெளிவருகின்றன'' என பிபிசியிடம் கூறினார்.

வறண்ட காலநிலையில் தாவரத்தின் வளர்சிதை மாற்றம் தாமதப்படுத்தப்படுகிறது. மழை பெய்யும்போது அவை புத்துணர்வு அடைவதால் தாவரங்கள் இந்த வாசனையை வெளிவிடுகின்றன.

மின்னல்
Science Photo Library
மின்னல்

மின்னல் :

இடி மின்னலுடன் கூடிய மழையும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக பேராசிரியர் மரிபெத் ஸ்டோல்ஜென்பர்க் விவரிக்கையில், ''மின்னல் மட்டுமின்றி, இடியும் மழையும்... குறிப்பாக மழையானது காற்றின் தரத்தை மேம்படுத்தும். தூசிகள் மற்றும் வாயுக்களில் இருக்கும் திட மற்றும் திரவ வடிவிலான சிறு பொருட்கள் (ஏரோசொல்ஸ்) மற்றும் வேறு சில பொருட்கள் மழை பெய்யும்போது வெளியேறி காற்று சுத்தப்படுத்தப்படுகிறது'' என்கிறார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
It turns out it's not just gratitude that makes rain smell so appealing after a long period of dry weather.There's actually some chemistry involved too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X