• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடியுரிமை சட்டத்தை பாதுகாப்பது ஏன்? ஜநாவில் விளக்கிய இந்தியா.. இம்ரான்கான் கருத்துக்கு கடும் பதிலடி

|

ஜெனிவா: குடியுரிமை சட்டம் குறித்து ஜெனிவாவில் நடந்த அகதிகள் மன்றத்தில் பேசிய ஐநாவுக்கான இந்திய தூதர், உலகெங்கிலும் உள்ள அகதிகளை இந்தியா வரவேற்றுள்ளது என்றும், ஜனநாயகம் மற்றும் உரிய செயல்முறைகள் மூலம் இந்த பிரச்சனையை கையாள்வதாகவும் தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவிற்கான இந்திய பிரதிநிதி ராஜீவ் கே சந்தர், முதல் உலகளாவிய அகதிகள் மன்றத்தில் அறிக்கை சமர்பித்தார். அந்த அறிக்கையில் பாகிஸ்தான் மனித உரிமைகளை சிறப்பாக கடைபிடிப்பதில் சாம்பியன் என்று கிண்டல் செய்த அவர், 1947 ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த தனது சொந்த சிறுபான்மை சமூகத்தின் அளவை 23 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைத்துவிட்டதாக விமர்சித்தார்.

இந்தியாவை பற்றி கூறிய ராஜ் கே சந்தர், "எங்களின் உயர்ந்த வரலாற்றைப் பொறுத்தவரை, துன்புறுத்தப்பட்டவர்களை இந்தியா எப்போதும் வரவேற்று அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது என்றார்.

டெல்லி பல்கலையில் கேரள மாணவனை டார்ச்சர் செய்யும் ஏபிவிபி மாணவர்கள்... வீடியோ

முஸ்லிம்கள் அகதிகள்

முஸ்லிம்கள் அகதிகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறுவார்கள் என்றும் அவர்கள் எல்லோரையும் பாகிஸ்தானால் ஏற்க முடியாது என்றும் இந்திய பாகிஸ்தான் இடையே அகதிகள் பிரச்சனை மட்டுமின்றி அணு ஆயுத போரும் வரலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

சம்பந்தம் இல்லாதது

சம்பந்தம் இல்லாதது

இதற்கு பதிலடி தரும் வகையில பேசிய இந்திய தூதர், "இந்தியாவின் குடியுரிமை சட்டம் என்பது பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். இந்திய அரசு இந்த பிரச்சனையில் ஜனநாயக ரீதியாகவும் உரிய செயல்பாடுகளின் மூலம் மட்டுமே கையாள்கிறது/

பயங்கரவாதம் தொழில்

பயங்கரவாதம் தொழில்

எனவே இந்திய மக்கள் சார்பாக யாரும்(பாகிஸ்தான்) பேச தேவையில்லை. வெறுப்பு சித்தாந்தம் மூலம் பயங்கரவாதத்தை தொழிலாக கட்டமைத்த அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கலை விட இது பெரியதல்ல. பாகிஸ்தான் பிரதமர் இம்ரன்கான், அவரது நாட்டை பற்றியும் அவரது சொந்த நாட்டு மக்களை பற்றி கவனம் செலுத்துவது நல்லது.

கெட்ட பெயர் ஏற்படுத்த

கெட்ட பெயர் ஏற்படுத்த

பாகிஸ்தான் பிரதமரால் கூறப்பட்ட தேவையற்ற மற்றும் நன்றியற்ற கருத்துக்களை நாங்கள் திட்டவட்டமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி இந்த மன்றத்தில் இந்தியா நிராகரிக்கிறது, அவரது கருத்து இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும்என்ற அவரது தவறான எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது... மேலும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் பாகிஸ்தானின் மற்றொரு மோசமான முயற்சி. பிராந்தியத்தில் எச்சரிக்கையான சூழ்நிலையை உருவாக்கவும் , சர்வதேச மன்றங்களை துஷ்பிரயோகம் செய்வும் பாகிஸ்தான் செயல்படுகிறது.

அகதிகள் பிரச்சனை

அகதிகள் பிரச்சனை

இந்தியா அகதிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக உலகளாவிய ஒற்றுமையின் உண்மையான உணர்வில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் உறுதிப்படுத்தவும் குடியுரிமை சட்டத்தின் மூலம் வாய்ப்பைப் பயன்படுத்துகிறது.

யூதர்கள்

யூதர்கள்

இந்தியா தனது வரலாறு முழுவதும், உலகம் முழுவதிலுமிருந்து அகதிகளை வரவேற்றுள்ளது. 7 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தஞ்சம் புகுந்த சௌராஸ்ட்ரியர்கள், இப்போது பார்சிஸ் என்று அழைக்கப்படுகிறார்கள், இந்திய ஜனநாயக அரசியலில் ஒரு துடிப்பான மற்றும் முக்கியமான சமூகம் அது. 16 ஆம் நூற்றாண்டில் துன்புறுத்தப்பட்ட யூதர்கள் தென்னிந்தியாவில் கொச்சினில் தஞ்சம் புகுந்தனர், அங்கு அவர்கள் கட்டிய ஜெப ஆலயம் இன்றுவரை உள்ளது.

கிழக்கு பாகிஸ்தான்

கிழக்கு பாகிஸ்தான்

எங்கள் காலத்திற்கு நெருக்கமாக, ஆயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானோர் எங்கள் அண்டை நாடுகளில் சிலவற்றிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். குறிப்பாக 1971ல் பல லட்சத்துக்கும் அதிகமானோர் முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்தனர், அதன் பின்னர் வங்க தேசம் பிறந்தது," என்று அவர் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
why india Government defends citizenship Act in Geneva, Permanent Representative of India to the UN, Geneva, Rajiv K Chander slams pakistan Imran Khan remarks at the Global Refugee Forum
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X