For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    RCEB - யில் இந்தியா ஏன் இணையவில்லை? மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்?

    பாங்காங்: சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுடனான ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கு முக்கிய காரணம் ஆர்சிஇபி என்று அழைக்கப்படும் 10நாடுகளுடனான தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த பிராந்திய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவில் உள்நாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்.

    குறிப்பாக இந்திய சந்தையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண், தொழில்துறை பொருள்கள் இந்திய சந்தையில் குவியும் என்பதால் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி கையெழுத்திட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா!கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா!

    ஆர்சிஇபி ஒப்பந்தம்

    ஆர்சிஇபி ஒப்பந்தம்

    ஆர்சிஇபி ஒப்பந்தம் என்பது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் சேர்ந்து தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான கூட்டம் நேற்று(நவ.4) தாய்லாந்தின் பாங்காங்கில் நடைபெற்றது.

    இந்தியாவுக்கு திருப்தியில்லை

    இந்தியாவுக்கு திருப்தியில்லை

    அப்போது பேசிய பிரதமர் மோடி, ஆர்சிஇபி ஒப்பந்தம் தற்போதைய சூழ்நிலையில் அதன் அடிப்படை நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் இல்லை. இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் இல்லை. வர்த்தக சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இந்தியாவின் அடிப்படை நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறினார்.

     கடுமையாக பாதிக்கப்படும்

    கடுமையாக பாதிக்கப்படும்

    இந்த ஒப்பந்ததில் இந்தியாவுடன் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் வர்த்தக சமநிலையை கடைபிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவில் உற்பத்தி செய்வதைவிட குறைவான விலையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண்,தொழில்துறை பொருட்கள் வந்து குவிந்துவிடும். இந்தியாவின் உள்நாட்டு சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்தது. இந்த சூழலில் தான் இந்தியாவின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படாததால் எங்கள் நாடு ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என மோடி அறிவித்துள்ளார்.

    சீனாவுக்கு வெற்றி

    சீனாவுக்கு வெற்றி

    இதனிடையே ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியாவை தவிர மற்ற 15 நாடுகளும் இணைவது உறுதியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு நன்மை பயக்கும் ஒப்பந்தமாக பார்க்கப்படுவதால் இந்தியா ஒருவேளை இதில் இணைந்தால் இது சீனாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.

    English summary
    India won't join the Regional Comprehensive Economic Partnership (RCEP) agreement , because domestic industry and agriculture at risk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X