For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக அழகி, டீன் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவிற்கு... மிஸ் யுனிவர்ஸ் தென்னாப்பிரிக்காவிற்கு பின்னணி காரணம்

உலகின் டீன் ஏஜ் பெண்களுக்கான டீன் மிஸ்யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சிருஷ்டிகவுர் இந்த ஆண்டு மகுடம் சூடினார். இதே போல உலக அழகி பட்டத்தை மனுஷி சில்லர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி- வீடியோ

    நிகாராகுவா: மிஸ் டீன் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இந்த ஆண்டு இந்தியாவில் சிருஷ்டி கவுர் பட்டம் வென்று மகுடம் சூடியுள்ளார். இதே போல உலக அழகியாக இந்தியாவின் மனுஷியும் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் இந்த ஆண்டிற்கான இளம் வயதினருக்கான மிஸ் டீன் யுனிவர்ஸ் அழகிப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர்.

    சீனாவின் சான்யா நகரில் கடந்த வாரம் நடந்த 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுசி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக அழகி பட்டம் வென்ற 6-வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

    இளம் பிரபஞ்ச அழகி

    இளம் பிரபஞ்ச அழகி

    இந்த ஆண்டு நடைபெற்ற டீன் மிஸ்யுனிவர் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற 25 அழகிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். இதில் நொய்டாவை சேர்ந்த சிருஷ்டிகவுர் இடம் பெற்றிருந்தார்.

    மயிலாக வந்த சிருஷ்டி கவுர்

    மயிலாக வந்த சிருஷ்டி கவுர்

    இந்திய தேசிய பறவையான மயில் போன்று நேர்த்தியான ஆடையை அணிந்து பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களை கவர்ந்த சிருஷ்டி கவுர் சிறந்த ஆடை அலங்கார போட்டியில் முதல் பரிசு வென்றார்.

    டீன் மிஸ் யுனிவர்ஸ்

    டீன் மிஸ் யுனிவர்ஸ்

    சிருஷ்டி நொய்டாவில் உள்ள லோட்டஸ் வேலி இன்டர்நேஷனலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது, லண்டன் பேஷன் பள்ளியில் படித்து வருகிறார். உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம்வயது மிஸ் யுனிவர்ஸ் -ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர்.

    உலக அழகிப் போட்டி

    உலக அழகிப் போட்டி

    இதே போல சீனாவின் சான்யா நகரில் கடந்த வாரம் நடந்த 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுசி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக அழகி பட்டம் வென்ற 6-வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    மிஸ் யுனிவர்ஸ் 2017

    மிஸ் யுனிவர்ஸ் 2017

    அமெரிக்காவின் லாஸ்வேகஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெக் நெல் பீட்டர்ஸ் பட்டம் வென்று மகுடம் சூடினார். இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றாவது இடத்தை ஜமைக்கா நாட்டுப்பெண்ணும் தட்டிச்சென்றனர்.

    எங்கெங்கும் அழகிப் போட்டிகள்

    எங்கெங்கும் அழகிப் போட்டிகள்

    93,94 நாடுகளில் வரிசையாக இந்திய பெண்கள் பிரபஞ்ச அழகியாகவும், உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்லூரிகள், பள்ளிகள், ஊருக்கு ஊர் என உலக அழகிப் போட்டிகள் நடைபெற்றன. முக அழகு முதல் உடல் அழகு சாதனப் பொருட்கள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்தன.

    மீண்டும் உலக அழகிகளாகும் இந்திய பெண்கள்

    மீண்டும் உலக அழகிகளாகும் இந்திய பெண்கள்

    இந்த ஆண்டு உலக அழகியாக மனுஷி, மிஸ் டீன் யுனிவர்ஸ் ஆக சிருஷ்டி கவுர், மிஸ் யுனிவர்ஸ் ஆக தென்னாப்பிரிக்க அழகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் அழகு சாதன பொருட்களின் விற்பனை சந்தையை குறிவைத்தே இதுபோன்று தேர்வு செய்யப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    English summary
    Srishti Kaur, 19, from India was crowned Miss Teen Universe 2017 at the sixth edition of the pageant held in the Ruben Dario National Theatre.The woman representing South Africa has won has won the Miss Universe crown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X