For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகொரியா...உணவுப் பஞ்சம்...இறைச்சியாகும் செல்லப்பிராணி நாய்கள்..கிம் ஜாங் உத்தரவு!!!

Google Oneindia Tamil News

பயோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை இறைச்சி தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Recommended Video

    வட கொரியாவில் உணவு பஞ்சம் | கிம் ஜாங் உன் திட்டம்

    வடகொரியாவில் பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவை ஒட்டிய வடகொரியா பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களாக கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆதலால், வடகொரியா போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று ஐநா அமைப்பின் மனித உரிமை வல்லுநர் கோரிக்கை வைத்து இருந்தார்.

    Why Kim Jong Un ordered to hand over pet dogs in North korea Why Kim Jong Un ordered to hand over pet dogs in North korea

    வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990களின் மத்தியில் உணவுப் பஞ்சத்திற்கு மட்டும் 3 மில்லியன் மக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என்ற தகவலை இதுவரை வடகொரியா வெளியிடவில்லை.

    கொரோனா தொற்று காரணமாக சீனாவுடனான வர்த்தகம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வடகொரியாவுக்கு 90% தடைபட்டு இருந்தது. வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது. பலரும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உணவு சாப்பிடுகின்றனர். அல்லது சோளம் மட்டும் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சிலர் பட்டினி கிடக்கின்றனர். இதனால், மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

    இதன் வெளிப்பாடுதான் கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை வலுக்கட்டாயமாக கொடுக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர். அல்லது நாய்களை பறித்துச் செல்கின்றனர். இவ்வாறு பறிக்கப்படும் நாய்களை விலங்குகள் சரணாலயத்துக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து இறைச்சி கடைகளுக்கு விற்று விடுகின்றனர்.

    முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: மேத்யூ சாமுவேல் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: மேத்யூ சாமுவேல் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

    இப்படி ஒரு பக்கம் கூறினாலும், வீட்டில் செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பது மேற்கத்திய கலாச்சாரம். இதை பறிக்கவே இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது முதலாளித்துவ சித்தாந்தத்தில் கறைபடிந்த போக்கு என்று கிம் ஜாங் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் சாதாரண மக்கள், பன்றி போன்றவற்றை வீட்டில் வளர்த்து வருகின்றனர். பணக்காரர்கள் மட்டுமே நாய் வளர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    வடகொரியாவில் 60% மக்கள் அதாவது 25.5 மில்லியன் மக்கள் போதிய உணவு இன்றி இருப்பதாக சமீபத்திய ஐநா புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெள்ளம் மற்றும் கொரோனா தொற்று இரண்டும் அந்த நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்திவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    English summary
    Why Kim Jong Un ordered to hand over pet dogs in North korea
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X