For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியோ கோவ்.. இன்னும் ஒரு உருமாற்றம் அடைந்தால் போதும்.. மனிதர்களிடம் தீயாய் பரவுமாம்.. புதிய வைரஸ்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: நியோ கோவ் என்ற புதிய வகையான சார்ஸ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வுஹானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது என்ன நியோ கோவ் என்று பார்க்கும் முன் வைரஸ்கள் குறித்த 2 அடிப்படைகளை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பறவைகள், விலங்குகளிடம் பல வகையான வைரஸ்கள் இருக்கும். உதாரணமாக வெளவ்வால்களிடம் பல லட்சக்கணக்கான வைரஸ்கள் உடலில் இருக்கும். பன்றிகளிடம் கூட நிறைய வகையான வைரஸ்கள் இருக்கும். ஆனால் இந்த வைரஸ் எல்லாம் அப்படியே மனிதர்களை தாக்கிவிடாது.

உதாரணமாக ஒரு பன்றியை அல்லது வெளவ்வாலை தொடுவதால் உங்களுக்கு அதன் வைரஸ் பரவும் என்று சொல்ல முடியாது (சில வைரஸ்கள் பரவலாம்). விலங்குகளிடம் இருக்கும் வைரஸ் ஒன்று மனிதர்களிடம் பரவ வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமான ஒரு விஷயம் தேவை.. அதுதான் உருமாற்றம்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டி? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் இது தான்! குடியரசு தலைவர் தேர்தலில் போட்டி? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் இது தான்!

உருமாற்றம் தேவை

உருமாற்றம் தேவை

அதாவது விலங்குகள் இடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களின் செல்களை துளைத்து அதில் பெருக்கம் அடைய வேண்டும் என்றால் அதற்கான உருமாற்றம் அந்த வைரஸிடம் இருக்க வேண்டும். அதாவது மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ற குணங்கள், ஆர்என்ஏ, டிஎன்ஏ, புரோட்டின் போன்றவை அந்த வைரஸிடம் இருக்கும். இதனால்தான் விலங்குகளிடம் பல லட்சம் வைரஸ்கள் பரவினாலும் அவை எல்லாமே மனிதர்களை தாக்கவில்லை. சமயங்களில் ஏதாவது ஒரு வைரஸ் இப்படி உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு ஏற்றபடி மாறி மனிதர்களிடம் பரவும் திறன் பெறும்.

கொரோனா

கொரோனா

வெளவ்வால்களிடம் இருந்ததாக கருதப்படும் சார்ஸ் கோவிட் குடும்ப வைரஸ்கள் மனித குலத்திற்கு தாவியது இப்படித்தான். எப்போது ஏற்பட்ட சில உருமாற்றங்கள் காரணமாக சார்ஸ் கோவிட் குடும்பத்தின் வைரஸ்கள் மனிதர்களை தாக்க தொடங்கியது. அப்படித்தான் சார்ஸ் கோவிட் குடும்பத்தின் முதல் தாக்குதலாக கருதப்படும் சார்ஸ் கோவிட் 1 தாக்குதல் 2003-2004ல் ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஏற்பட்டது. இதை சுருக்கமாக சார்ஸ் என்று அப்போது அழைத்தனர்.

மெர்ஸ்

மெர்ஸ்

அதேபோல்தான் சார்ஸ் கோவிட் குடும்பத்தின் இன்னொரு வைரஸால் மிடில் ஈஸ்ட் வைரஸ் எனப்படும் மெர்ஸ் மத்திய கிழக்கு நாடுகளில் தாக்கியது. இது 2012ல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது. இப்போது நம்மை வீட்டில் முடக்கி இருக்கும் கோவிட் 19 என்பதும் இதே சார்ஸ் கோவிட் குடும்பத்தை சேர்ந்ததுதான். இதை சார்ஸ் கோவிட் 2 என்றுதான் அழைத்து வருகின்றன. ஓகே.. விஷயத்திற்கு வருவோம்.. சார்ஸ் கோவிட் குடும்பத்தில் இந்த 3 வைரஸ்கள்தான் இருக்கிறதா என்றால் இல்லை.. இன்னும் பல வைரஸ்கள் இந்த சார்ஸ் - கோவிட் குடும்பத்தில் உள்ளன. அதன் கணக்கு ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே மாறுபடும்.

 நியோ கோவ்

நியோ கோவ்

அப்படி இப்போது சார்ஸ் கோவிட் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கும் வைரஸ்தான் நியோ கோவ். இது கொரோனா வைரஸின் உருமாற்றம் இல்லை மக்களே.. இன்னும் சொல்லப்போனால் இது மனிதர்கள் இடையே இன்னும் பரவவே இல்லையாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று வுஹான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம் கோவிட் 19 பரவியதே அதே வுஹானில் இருக்கும் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள்தான் இதை தெரிவித்துள்ளனர்.

வைரலாஜி எச்சரிக்கை

வைரலாஜி எச்சரிக்கை

இந்த நியோ கோவ் இப்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது. அங்கு வெளவ்வால்கள் உள்ளிட்ட சில பறவைகள் மற்றும் விலங்குகளிடம் நியோ கோவ் பரவி வருகிறது. முன்பே சொன்னது போல இது இப்போது பறவைகளிடம் பரவினாலும் இதில் உருமாற்றம் ஏற்பட்டால் மனிதர்களிடம் பரவும். ஆனால் சிக்கல் என்னவென்றால் இதில் ஒரே ஒரு சின்ன உருமாற்றம் அடைந்தால் போதும். அது மனிதர்களிடம் தீயாய் பரவுமாம். இப்போது இருக்கும் நிலையில் இருந்து PDF-2180-CoV என்ற உருமாற்றத்தை மட்டும் அடைந்தால் நியோ கோவ் மனிதர்களை தாக்கும் திறன் பெறும்.

சிக்கல் என்ன

சிக்கல் என்ன

சரி மனிதர்களிடம் பரவும் போது. இப்போது ஏன் பயமுறுத்துகிறார்கள் என்று கேட்கிறீர்களா.. நியோ கோவ் பற்றி இப்போதே எச்சரிக்கை விடுக்க காரணம் இருக்கிறது. இப்போது பரவும் கொரோனா வைரஸை விட இது பல மடங்கு சக்தி வாய்ந்தது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டது. மெர்ஸ் வைரஸ் அதிக மரணத்தை ஏற்படுத்த கூடியது. இந்த நியோ கோவ் இதன் இரண்டின் கலவையாக உள்ளது. அதாவது மிக வேகமாக பரவும், அதேபோல் மிக அதிக மரணத்தை ஏற்படுத்தும் என்றும் நியோ கோவ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மரணம் அளவு

மரணம் அளவு

அதாவது கொரோனா வைரஸின் மரண சதவிகிதம் 3.4% தான் உலகம் முழுக்க. அதாவது 36.3 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 56.3 லட்சம் பேர்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நியோ கோவ் வந்தால் மரண சதவிகிதம் 33.33 ஆக இருக்கும். அதாவது 100 பேர் பாதிக்கப்பட்டால் 33 -34 பேர் பலியாகும் வாய்ப்புகள் உள்ளன. இப்போது கொரோனாவோடு ஒப்பிட்டால் 56.3 லட்சம் நியோ கோவ் கேஸ்களுக்கு 18 கோடி பேர் பலியாகி இருப்பார்கள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா?

Recommended Video

    நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்
    கவனம்

    கவனம்

    கொரோனா என்பது கடைசி வைரஸ் இல்லை.. இன்னும் பல வைரஸ்கள்உலகம் முழுக்க உள்ளது. பல புதிய பெருந்தொற்றுகள் உலகை தாக்கலாம். மக்கள் இப்போதே கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அரசுகள் முறையாக உருவாக்க வேண்டும் என்று கடந்த வருடமே உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் எச்சரிக்கை விடுத்தது போலவே நியோ கோவ் என்ற புதிய பூதம் மனிதர்களுக்கு மிக அருகில்... தாக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது!

    English summary
    Why Neo Cov is stronger and faster than Coronavirus? All you need to know about this SARS family virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X