For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கிய புயல்.. ஜப்பானில் திடீரென பிங்க்.. ஊதாவுக்கு மாறிய மேகங்கள்.. பேரழிவு அதிர்ச்சியில் மக்கள்

Google Oneindia Tamil News

டோக்கியோ: 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் ஜப்பானை தாக்கப்போகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஹகிபிஸ் புயல் நெருங்கிவிட்ட நிலையில், வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறியுள்ளது.

ஏற்கனவே மழையால் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில புயல் நெருங்கும் வேளையில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு வானம் மாறி இருப்பதுமக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஜப்பானில் தற்போது மிகப்பெரிய கனமழை பெய்துவருகிறது. காற்று பயங்கரமாக வீசி வருகிறது. வாகனங்களை சூறை காற்று தூக்கி எறிந்து வருகிறது. ஹகிபிஸ் புயல் மணிக்கு 236 கிலோமீட்டர் வேகத்தில் டோக்கியா நகரை நெருங்கிவிட்டது.

ஊதா வானம்

ஊதா வானம்

புயல் நெருங்கி உள்ள நிலையில் வானம் திடீரென அடர்ந்த பிங்க நிறத்திற்கு மாறியது. அப்படியே தற்போது ஊதாவாக மாறிக்கிடக்கிறது. புயல் நெருங்கும் வேளையில் திடீரென வானம் ஊதா நிறத்திற்கு மாறியிருப்பது ஜப்பான் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

 வானியல் காரணம்

வானியல் காரணம்

வானம் ஊதா நிறத்திற்கு மாற காரணம் என்ன என்பது குறித்து அறிவியல் ரீதியாக விசாரித்தால் ஊதா வானம் என்பது உண்மையில் மிகப்பெரிய சூறாவளிக்கு முந்தைய அல்லது பிந்தைய நிகழ்வு என்கிறார்கள். ஊதா வானம் என்பது சிதறல் எனப்படும் வானிலை நிகழ்வின் விளைவு என்று தெரிவிக்கிறார்கள்.

 அடர்ந்த ஊதா வானம்

அடர்ந்த ஊதா வானம்

ஜப்பானில் அடர்ந்த ஊதா நிறத்தில் காணப்பட்டும் மேகங்களை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படம்பார்ப்பதற்கு மக்கள்பீதிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. பேய்மழை, புயல், ஊதா வானம் என ஜப்பான் மக்கள் கலங்கிபோய் உள்ளார்கள்.

50லட்சம் மக்கள்

இதனிடையே ஜப்பான் அரசு இதுவரை புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என்று கண்டறிந்து 2லட்சத்து 66 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது. மேலும் 50லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

English summary
sky turns pink in japan, Why did the sky turn purple? reasion here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X