For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சீக்ரெட்" கேமரா! உளவாளி திமிங்கலத்தை இறக்கி வேடிக்கை பார்க்கும் ரஷ்யா? கிட்ட செல்லவே அலறும் ஸ்வீடன்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அழகான இளம் பெலுகா திமிங்கலத்தைக் கண்டு ஸ்வீடன் நாடே அச்சத்தில் இருக்கிறது. இது உளவாளி திமிங்கலாமாக இருக்கலாம் என ரஷ்யா அஞ்சுவதால் கிட்ட செல்லவே ஸ்வீடன் மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

பார்க்கவே அழகாகவும் க்யூட்டாகவும் இருக்கும் திமிங்கலம் வகை என்றால் அது பெலுகா இன திமிங்கலம் தான். இந்த வகை திமிங்கலங்கள் ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் பொதுவாக இருக்கும்.

மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய இந்த பெலுகா இன திமிங்கலம் மீனவர்களுடன் ஈஸியாகவும் நட்பாகவும் பழகக்கூடியது. இது மீனவர்களுடன் நட்பாக இருக்கும் பல வீடியோக்கள் இணையத்திலும் டிரெண்டாகியுள்ளது.

 Why Sweden’s coast is alarmed to see Suspected Russian spy whale Hvaldimir

திமிங்கலம்: இவ்வளவு நட்பாகப் பழகும் பெலுகா இன திமிங்கலங்களை பார்த்தால் அனைவருக்கும் கொண்டாட்டமாகவே இருக்கும். ஆனால், ஸ்வீடன் நாட்டில் மட்டும் இந்த இன திமிங்கலத்தை பார்த்துத் தெறித்து ஓடுகிறார்களாம். இதற்கு காரணமே ரஷ்யா தான். ஒரு திமிங்கலத்தை பார்த்து ஓடும் அளவுக்கு ரஷ்யா அப்படி என்ன செய்துள்ளது எனக் கேட்கிறீர்களா... வாங்கப் பார்க்கலாம்..

இந்த குறிப்பிட்ட பெலுகா திமிங்கலம் முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு நார்வேயில் கடற்கரையில் காணப்பட்டது. அப்போது தான் இந்த பெலுகா திமிங்கலம் மீது மக்களுக்கு அச்சம் வந்தது. இது ரஷ்யக் கடற்படையால் உளவு பார்க்கப் பயிற்சி அளிக்கப்பட்ட உளவாளி திமிங்கலம் என்றே அஞ்சினர். இந்த தமிங்கலத்தின் கழுத்து பகுதியில் ஒருவித பெல்ட் இருந்தது.

திடீர் வேகம்: இதன் காரணமாகவே இது ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்குமோ என அச்சம் எழுந்தது. நார்வேயின் வடக்குப் பகுதியான ஃபின்மார்க்கில் முதலில் கண்டறியப்பட்ட இந்த திமிங்கலம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நார்வே கடற்கரை பகுதியில் மெல்ல நகர்ந்துள்ளது. இருப்பினும், சமீபத்திய அது திடீரென வேகமாக நீந்தி ஸ்வீடன் பக்கம் வந்துள்ளது.

இந்த பெலுகா திமிங்கலம் ஞாயிற்றுக்கிழமை, ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் ஹன்னெபோஸ்ட்ராண்டில் காணப்பட்டது. இது தொடர்பாகக் கடல் சார்ந்த ஆய்வாளர் செபாஸ்ட்டியன் ஸ்ட்ராண்ட் கூறுகையில், "மெதுவாகச் சென்று கொண்டிருந்த அந்தத் திமிங்கலம் திடீரென ஏன் வேகமெடுத்தது எனத் தெரியவில்லை. கடலில் அது இவ்வளவு விரைவாக ஏன் நீந்தியுள்ளது என்பது புதிராகவே உள்ளது.

 Why Sweden’s coast is alarmed to see Suspected Russian spy whale Hvaldimir

இது ஒரு துணையைக் கண்டுபிடிக்க உந்தும் ஹார்மோன்களால் இப்படி நடந்திருக்கலாம்.. அல்லது அது தனிமையாக இருக்கலாம்.. ஏனென்றால் பெலுகா திமிங்கலங்கள் எப்போது கூட்டமாகவே இருக்கும்.. இந்த பெலுகா தனிமையில் இருப்பதால் அது தனது ஜோடியையோ அல்லது ஒரு குழுவையோ தேடி இருக்கலாம். இந்த குறிப்பிட்ட பெலுகா திமிங்கலத்திற்கு 13, 14 வயது இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் அதன் உடலில் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும்" என்றார்.

உளவாளி திமிங்கலம்: இந்த பெலுகா திமிங்கலம் முதலில் நார்வே ஆர்க்டிக் பகுதியில் தோன்றியபோது, ​​நார்வே மீனவர்கள் அது கழுத்தில் ஏதோ சாதனம் இருப்பதை உணர்ந்தனர் இதையடுத்து மீன்வள இயக்குநரக உதவியுடன் அந்த கருவி அகற்றப்பட்டது. அதில் ஒரு சீக்ரெட் கேமரா, பிளாஸ்டிக் கிளாஸ்ப்களில் சில வார்த்தைகள் இருந்தன.

"பாய்சன்?" புதின் மீட்டிங்கிற்கு பின் திடீரென சரிந்த பெலாரஸ் அதிபர்.. ரஷ்யாவில் என்ன நடக்கிறது

அப்போது நார்வே அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், "இந்தத் திமிங்கலம் ஒரு மையத்தில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். அங்கிருந்து அது தப்பியிருக்கலாம். அது மனிதர்களுடன் பழகிய திமிங்கலம் போலவே இருக்கிறது. அது ரஷ்யக் கடற்படையில் பயிற்சி பெற்று இருக்கலாம் எனச் சந்தேகம் இருக்கிறது" என்றார்.

பெலுகா திமிங்கம் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்று நார்வே அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்த போதிலும், ரஷ்யா இதற்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Russian spy whale appears near Sweden’s coast: Russia is training whale to spy on across the coasts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X