"காசா மக்களை இஸ்ரேல் பாதுகாக்கணும்.." திடீரென டோனை மாற்றும் அமெரிக்க அதிபர் பைடன்.. இது மேட்டரே வேற
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் சண்டை தொடரும் நிலையில், திடீரென அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் சண்டை தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. சமீப காலங்களில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் மோசமான தாக்குதலாகும்.

இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மேலும் படையெடுப்பை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இஸ்ரேல் யுத்தம்: இஸ்ரேல் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தொடரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் உரையாடினார். அப்போது தான் அவர் காசாவில் இருக்கும் அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து தனது பொதுமக்களைப் பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்த பைடன், பிணையக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்தார். காசாவில் ஹமாஸ் மற்றும் பொதுமக்களை வேறுபடுத்த வேண்டும் என்றும் அப்பாவி காசாவில் வசிக்கும் மக்களை இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
பைடன் சொன்ன முக்கியமான மேட்டர்: மேலும், காசா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் பைடன் வலியுறுத்தினார். போர் தொடரும் நிலையில், திடீரென காசாவில் உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது இஸ்ரேலின் கடமை என்று பைடன் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிபர் பைடன் இன்று காலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். காசாவில் இப்போது இருக்கும் நிலை குறித்து இரு தரப்பு தலைவர்களும் விவாதித்தனர். பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருக்கிறது என்பதை பைடன் மீண்டும் வலியுறுத்தினார்.
பிணையக் கைதிகள்: அதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க அதைச் செய்ய வேண்டும் என்பதையும் அதிபர் வலியுறுத்தினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் வசம் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக இருக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இஸ்ரேல் நாட்டில் போர் தொடங்கியது முதலே அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பித்த பிறகு பல முறை இரு தலைவர்களும் தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளனர். அதை எல்லாம் தாண்டி இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் வகையில், அதிபர் பைடன் நேரடியாகவே இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் அதேநேரம் இந்தப் போர் அங்கே பிராந்தியம் முழுக்க பரவக் கூடாது என்பதிலும் அமெரிக்கா கவனமாக இருக்கிறது. இதன் காரணமாகவே காசா மீதான படையெடுப்பை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications