For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்களை விட பெண்களுக்கு ஆயுசு கெட்டி... ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அதிகளவு இருதய நோய்களால் பாதிக்கப்படுவதால் பெண்களை விட ஆண்கள் குறைவான ஆண்டுகளே உயிர் வாழ்வதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆண்களை விட பெண்கள்தான் அதிக காலம் வாழ்கிறார்கள். உலகெங்கும் இது இயல்பான ஒன்று. ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வது ஏன் என்பது குறித்து முன்பு பெரிய அளவில் யாரும் ஆய்வு மேற்கொண்டதில்லை. மேலும், ஆனால், இதற்கான உறுதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை.

குரோமோசோம்கள் உட்பட இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில், இருதய நோய்தான் (மாரடைப்பு) இந்த ஆயுள் வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது கூறுகின்றனர்.

ஆய்வு...

ஆய்வு...

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூப்பியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 20ம் நூற்றாண்டில் ஆண், பெண் இருவருக்கும் இடையேயான சுகாதார முறை, உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இருதய பாதிப்பு...

இருதய பாதிப்பு...

இதற்காக 13 வளர்நத நாடுகளில் 1800 முதல் 1935ம் ஆண்டு வரை மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஆராயப்பட்டது. அதில், 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு (பெண்களை விட ) அதிக அளவில் இருதய பாதிப்புகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

புகைப்பிடித்தல்...

புகைப்பிடித்தல்...

மேலும், புகைப்பிடித்தலால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இருதய நோய் பாதிப்பால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வாழ்க்கைமுறை மாறுதல்கள்...

வாழ்க்கைமுறை மாறுதல்கள்...

கடந்த 1800ம் ஆண்டுகளைப் பார்க்கையில் 1900களில் மனிதர்களின் சுகாதாரத் தன்மை மற்றும் உணவுப் பழக்க வழக்கம் மாறியுள்ளதாக, மேம்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இதன் பலன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகளவில் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.

குறைவு...

குறைவு...

1880ம் ஆண்டுகளுக்குப் பிறகு 40 வயதுக்கு மேற்பட்ட உயிரிழப்போரில் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் 70 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகின்றது. இந்த ஆய்வு முடிவுகள் பிஎன் ஏ எஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Men have shorter lives than women because they are more prone to heart disease, claims a new study that found significant differences in life expectancies between the sexes first emerged as recently as the turn of the 20th century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X