For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமதிக்க மாட்டோம்.. சட்டப்பிரிவு 370ல் கைவைத்தால் அவ்வளவுதான்.. இந்தியாவிற்கு பாக். எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்க கூடாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்க கூடாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவை அப்படி செய்ய விடமாட்டோம் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. இந்த சட்டப்பிரிவு இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத சிறப்பு அதிகாரத்தை காஷ்மீருக்கு வழங்குகிறது.

இந்த சட்டப்பிரிவை பயன்படுத்திதான் காஷ்மீரில் 35ஏ சட்டப்பிரிவும் அமல்படுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்தை அடுத்த குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் கொண்டு வந்த சிறப்பு பிரகடணம் மூலம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமர் நேரு மூலம் இந்த சட்டத்தை பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஸ்டைல் ஆபரேஷன்.. துரைமுருகன் வீட்டில் நடந்தது போலவே ரெய்டு.. வடஇந்தியா முழுக்க பரபரப்பு! அதே ஸ்டைல் ஆபரேஷன்.. துரைமுருகன் வீட்டில் நடந்தது போலவே ரெய்டு.. வடஇந்தியா முழுக்க பரபரப்பு!

என்ன அதிகாரம்

என்ன அதிகாரம்

இந்த சட்டப்பிரிவு மூலம் பல சிறப்பு அதிகாரங்களை ஜம்மு காஷ்மீர் பெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். வேறு மாநில மக்கள் எத்தனை வருடமாக அங்கு இருந்தாலும் நிலம் வாங்க முடியாது. ஜம்மு அரசு வேளைகளில் வேறு மாநில மக்கள் சேர முடியாது. ஜம்முவில் கல்லூரிகளில் வேறு மாநில மக்கள் ஸ்காலர்ஷிப் பெற முடியாது.

என்ன முயற்சி

என்ன முயற்சி

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு இதை நீக்குவதற்காக நீண்ட நாட்களாக முயன்று வருகிறது. ஆனால் ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாத காரணத்தால் பாஜக அப்படி இந்த சட்டத்தை நீக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்து இருக்கிறது.

பாகிஸ்தான் முயற்சி

பாகிஸ்தான் முயற்சி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சார்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா இந்த சட்டத்தை நீக்க முடியாது. அவர்கள் இந்த சட்டத்தை நீக்கினால் காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் அமைதி குலையும். அங்கு பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படும்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்தியாவின் இந்த செயலை பாகிஸ்தான் எப்போதும் அனுமதிக்காது. இது ஐநா ஒப்பந்தத்திற்கும் எதிரானது. பாகிஸ்தான் இந்த சட்டத்திற்கு எதிராக சிறிதாக ஏதாவது செய்ய நினைத்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

English summary
We will not allow India to Abrogate 370 in Jammu Kashmir says Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X