For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான படை மியூசியத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டது போன்ற பொம்மை! "எல்லை மீறும்" பாக்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான படை மியூசியத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்டது போன்ற உருவபொம்மை வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதியின் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர்.

இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா கோபம் கொண்டது.

விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்

இந்தியா

இந்தியா

மேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ஒரு பதிலடியை கொடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் வான் வழித் தாக்குதலை இந்தியா நடத்தியது.

இந்திய விமான படை

இந்திய விமான படை

அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் வான் வெளியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அப்போது பாகிஸ்தான் விமானபடையை விரட்டும் பணியில் இந்திய விமான படை மும்முரம் காட்டின.

துரதிருஷ்டவசம்

துரதிருஷ்டவசம்

அப்போது மிக் ரக 21 விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை துரத்தும் போது அந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு கருதி பாராசூட் மூலம் கீழே குதித்தார். அவர் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார்.

இந்திய தூதரகம்

இந்திய தூதரகம்

இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்தனர். பாகிஸ்தான் பிடியில் ரத்தக் காயங்களுடன் அபிநந்தன் இருந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து அபிநந்தனை விடுவிக்க இந்தியா தூதரக ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் செய்தது.

உருவபொம்மை

இதைத் தொடர்ந்து மார்ச் 1-ஆம் தேதி அட்டாரி- வாகா எல்லையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனை பாகிஸ்தான் வீரர் ஒருவர் சிறைபிடித்து அழைத்து செல்வது போன்ற உருவபொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

English summary
Pakistan displays a mannequin of Wing Commander Abhinandhan in Air force museum who was caught by Pakistan Army on Feb 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X