For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Google Oneindia Tamil News

காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது.

அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.. என்னதான் பேச்சுவார்த்தை நடந்தாலும், தாக்குதல் சம்பவங்கள் குறையவே இல்லை..

ஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..!ஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..!

தாக்குதல்

தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தபடியேதான் உள்ளது.. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதல் வேட்டையை நடத்தி வருகிறது.. அதிலும், தங்களுக்கு எதிரானவர்கள் யார் யார் என்று குறி வைத்து கொன்று தீர்க்கிறது.. அதில், மீடியாக்காரர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்களும் அடக்கம்.

 சமூக ஆர்வலர்

சமூக ஆர்வலர்

அப்படித்தான் ஒரு சமூக ஆர்வலரை இரக்கமே இல்லாமல் கொன்றுவிட்டனர் பயங்கரவாதிகள்.. கபிசா என்ற மாகாணத்தில் கோஹிஸ்டன் மாவட்டத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் அவர்.. பிரஸ்டா கோஹிஸ்டனி என்பது அவரது பெயர்.. 29 வயதாகிறது.. பெண் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இருப்பவர்.. அங்குள்ள மீடியாக்களிலும் பிரஸ்டா வெகு பிரபலமானவர்.

 துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

இந்நிலையில், தன் வீட்டு வாசலில் நின்று அண்ணனுடன் பேசி கொண்டிருந்தார்.. அப்போது திடீரென பைக்கில் வந்த துப்பாக்கியை எடுத்து பிரஸ்டாவையும், அவரது அண்ணனையும் நோக்கி சரமாரியாக சுட்டனர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பிரஸ்டாவும், அவரது அண்ணனும் ரத்த வெள்ளத்தில் சரிந்து, அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

 கண்டனங்கள்

கண்டனங்கள்

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.. ஆயினும் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கு விலகவில்லை. இளம் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

English summary
Woman activist shot dead in Afghanistan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X