For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வாலிபரை “லிப்ட்”க்குள் பலாத்காரம் செய்து பிக்பாக்கெட்டும் அடித்த ”பலே” பெண்மணி கைது!

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் லிப்ட்டுக்குள் இந்திய வாலிபரை பலாத்காரம் செய்து அவரது பாக்கெட்டில் இருந்த 4 ஆயிரத்து 500 திர்ஹம் பணத்தை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அந்த வாலிபர் கூறுகையில், "கடந்த டிசம்பர் மாதம் 17 aaம் தேதி நான் புர் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிப்ட்டினுள் ஏறி நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தினேன்.

அப்போது உள்ளே இருந்த அந்தப் பெண் தனது பர்தாவை நீக்கி விட்டு என்னைப் பார்த்து எப்படி இருக்கீங்க என்று கேட்டாள். என்னை நெருங்கி வந்து என்னை கட்டிப்பிடித்தாள்.

அதற்குள் நான்காவது மாடியை லிப்ட் அடைந்து விட்டது. நான் வெளியே சென்றபோது எனது சட்டையை பிடித்து உள்ளே இழுத்துப் போட்டாள். ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தினாள்.

என்னை பலவந்தமாக கட்டியணைத்த போது லிப்ட் 7 ஆவது மாடியை அடைந்து விட்டது. மீண்டும் நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தி விட்டாள். நான்காவது மாடியில் லிப்ட் நின்றபோது நான் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பி ஓட்டம் பிடித்தேன்.

வெளியே வந்து பார்த்தபோது எனது பின் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்தேன். அதில் வைத்திருந்த 4500 திர்ஹம் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய் மாயமாகி விட்டிருந்தது. இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்தேன். அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு அந்த இந்திய வாலிபர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்த ஜோர்டானியப் பெண், " நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள். அவர் சொல்வது போல் எந்த தவறையும் நான் செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.

அந்த வாலிபர் லிப்ட்டினுள் ஏறுவதற்கு முன்னதாக அந்தப் பெண் உள்ளே இருந்ததும், வெளியே தப்பித்து ஓடிவர முயற்சித்த அந்த வாலிபரை அந்தப் பெண் லிப்ட்டினுள் இழுத்துப் போடுவதும் அந்த கட்டிடத்தில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இந்தப் பதிவு போலீஸ் தரப்பு ஆவணமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

English summary
An Arab woman allegedly molested an Indian man and snatched his wallet in an elevator in Bur Dubai in December, the Dubai Criminal court heard on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X