For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் 2கி ‘கொகைன்’ கடத்திய கனடா பெண் கைது

Google Oneindia Tamil News

பொகோடோ: கொலம்பியா விமான நிலையத்தில் கர்ப்பிணி போல் நடித்து, 2கி கோகைன் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடாப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் மீது, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள்.

அப்போது கர்ப்பம் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை அப்பெண் கூறியுள்ளார். இதனால், பெண் அதிகாரி ஒருவர் மூலம், அப்பெண்ணை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர் அதிகாரிகள்.

அதன்படி, அப்பெண்ணை சோதனை செய்த அதிகாரி அப்பெண்ணின் வயிறு மிகவும் கடினமாகவும், அதேசமயம் குளிர்ந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மருத்துவ சோதனையில், அப்பெண்ணின் வயிற்றில் 60 ஆயிரம் டாலர் மதிப்புடைய 2 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள், ரப்பர் மரத்தின் பால் பசையால் வயிற்றில் ஒட்டி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

Woman caught smuggling drugs in fake belly

இதனையடுத்து, கோகைன் கடத்திய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில், அவருக்கு 5 முதல் 8 வருட சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
A Canadian citizen was arrested at the airport while attempting to leave Colombia with over four pounds of cocaine hidden in a fake pregnancy belly. A customs officer noticed the belly was unusually hard and cold during a routine pat down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X