For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் அடையாள சின்னமான சுதந்திர தேவி சிலை மீது ஏறி பெண் போராட்டம்

அமெரிக்காவின் அடையாள சின்னமான சுதந்திர தேவி சிலை மீது பெண் ஒருவர் ஏறி போராட்டம் நடத்தினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் அடையாள சின்னமாக உள்ள சுதந்திர தேவி சிலை மீது பெண் ஒருவர் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் முக்கிய அடையாள சின்னமாக உள்ளது நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை. இந்த சிலை மீது ஏதோ ஒரு உருவம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Woman Climbs Statue of Liberty Forcing 4-Hour Standoff With Police

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடினர். அப்போது சிலையின் மேல் ஒரு பெண் இருப்பதை கண்டறிந்தனர்.அவரை கீழே இறங்குமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண்ணை போலீஸார் கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
The Statue of Liberty, a powerful symbol of US freedom and long a beacon to immigrants, was shut down Wednesday on Independence Day as a woman refused to leave its base in a lengthy standoff with police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X