For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிட்னியைக் கொடுத்து இதயத்தைத் திருடிய பெண்... இது அமெரிக்க "செம"!

Google Oneindia Tamil News

கென்ட்டகி: பெரும்பாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவருக்கோ சிறுநீரகத்தைத் தானமாக தந்து உன்னில் பாதி நான் என நிரூபிப்பது உண்டு. ஆனால், இதற்கு விதிவிலக்காக அமெரிக்காவில் சிறுநீரகத்தைத் தானமாக கொடுத்த பெண்ணையே, தன் மனைவி ஆக்கியிருக்கிறார் ஒருவர்.

அமெரிக்காவின் கென்ட்டகி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷ்லி என்ற இளம்பெண். கடந்த ஆண்டு ஒரு நாள் தனது தாயாரும், பாட்டியும் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்டார் ஆஷ்லி. அதில், டேனி ராபின்சன் என்ற இளைஞர் சிறுநீரகம் செயலிழந்த நிலையில், உயிருக்கு போராடுவதாக ரேடியோ மூலம் கேள்விப்பட்டதாக பேசிக் கொண்டிருந்தனர்.

Woman Donates Kidney to Stranger, Now They're Getting Married

மேலும், அதற்கு முந்தைய வருடங்களில் அந்த இளைஞர் புற்றுநோய்க்கு தனது தந்தையைப் பலி கொடுத்ததையும், தீக்கு வீடு இரையானதையும் குறித்து அவர்கள் வருத்தத்தோடு பேசினார்கள். இதனைக் கேள்விப்பட்ட ஆஷ்லிக்கு, தான் அந்த இளைஞருக்கு சிறுநீரகம் கொடுத்தால் என்ன என தோன்றியது.

அதற்குத் தகுந்தாற்போல், ஆஷ்லிக்கு ஓ பாசிடிவ் ரத்த வகை. எனவே, ரத்தப்பிரிவு ஒத்துப் போகவேண்டும் என்ற பிரச்சினையும் இல்லை. எனவே, அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை ஆஷ்லி தெரியப்படுத்தினார்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் ஆஷ்லியின் சிறுநீரகம் டேனிக்கு பொருந்தும் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஆஷ்லியின் சிறுநீரகம் டேனிக்குப் பொருத்தப்பட்டது.

இந்த ஆபரேஷன் நடந்த சில தினங்களில் டேனியைச் சந்தித்தார் ஆஷ்லி. முதலில் நண்பர்களாக பழகிய இருவரும், பின்னாளில் காதலர்கள் ஆனார்கள். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். வரும் ஜூன் மாதம் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறது இத்தம்பதி.

டேனி ஒரு நல்ல தந்தையாக இருப்பார் என்று பூரிப்புடன் கூறுகிறார் ஆஷ்லி.

English summary
A year ago, Ashley McIntyre decided to donate her kidney to a total stranger. Today, she's engaged to him, and their baby is due in June.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X