For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவீன அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக டாலர் நோட்டில் பெண் படம்! லக்கி பெண் யார்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க நவீன வரலாற்றில் முதல் முறையாக அந்த நாட்டு கரென்சியான டாலரில் பெண் ஒருவரின் படத்தை இடம்பெறச் செய்யப்போகிறார்களாம். இதற்கான அறிவிப்பை அந்த நாட்டு கருவூலகத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டாலர் உலக அளவில் புகழ் பெற்றது. நம்மூர் பணத்தில் காந்தி தாத்தா படம் இடம்பெற்றுள்ளதை போல அமெரிக்க நாட்டு டாலரில் பல்வேறு தலைவர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பெண் தலைவர்கள், பெண்களில் புகழ் பெற்றோர் படங்கள் இடம் பெறவில்லை.

பெண் படம்

பெண் படம்

இந்நிலையில், முதல்முறையாக பெண் படத்தை பிரசுரிக்க அந்த நாட்டு கருவூலகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து 2020ம் ஆண்டில், நூறாண்டுகள் ஆக உள்ளது. எனவே, அப்போது பெண் படத்துடன் புதிய டாலர் நோட்டை வெளியிட அமெரிக்க கருவூலகம் முடிவு செய்துள்ளது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

10 டாலர் நோட்டில் பெண் படம் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த டாலரில் இடம் பெறப்போகும் பெண் யார் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்கர்களிடம் எகிறியுள்ளது. கருவூல செயலாளர் ஜேக் லியூ, பொதுமக்களிடம் கருத்து கேட்டு டாலரில் இடம்பெற வேண்டிய பெண் யார் என்ற முடிவை எடுக்க உள்ளார்.

போட்டியிலுள்ள பெண்கள்

போட்டியிலுள்ள பெண்கள்

அமெரிக்காவில் அடிமையாக இருந்து தனது அடிமைத்தளையை மட்டுமின்றி, 300 சக அடிமைகளை விடுதலை பெறச் செய்த ஹேரியட் டப்மேன், பெண்கள் உரிமை, ஏழைகள் நலனுக்காக வழக்கறிஞர் தொழில் பார்த்த மாஜி அதிபர் ரூஸ்வெல்ட் மனைவி எலேனர் ரூஸ்வெல்ட், ரோசா பார்க்ஸ், வில்மா மேன்கில்லர் ஆகிய பெண்கள் இந்த போட்டியிலுள்ளனர்.

சில்லரைகளில் மட்டும்

சில்லரைகளில் மட்டும்

சூசன், சகாகவே ஆகிய பெண்கள் படங்கள் 1 டாலர் நாணயங்களில் இடம் பெற்றிருந்தன. ஆனால் கரென்சியில் பெண்கள் உருவம் சமீபத்தில் இடம்பெறவில்லை. 1880களில் ஜார்ஜ் வாஷிங்டன் மனைவி மார்தா வாஷிங்டன் உருவப்படம் 1 டாலர் கரென்சியில் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த நோட்டுகளை அவரது கணவரே தடை செய்துவிட்டு அவரது படத்தை இடம் பெறச் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
In a historic decision, the US will put picture of a 'notable' woman on an USD 10 note for the first time in over a century, breaking the norm that male political heroes are only portrayed on the greenback.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X