For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை

அமெரிக்காவிற்கு பிரான்சில் இருந்து ஆப்பிள் கொண்டு சென்ற பெண்ணிற்கு 33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவிற்கு பிரான்சில் இருந்து ஆப்பிள் கொண்டு சென்ற பெண்ணிற்கு 33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

கிரிஸ்டல் தட்லாக் என்ற பெண் பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணிடம் இருந்த ஆப்பிளை பார்த்துவிட்டு இவ்வளவு அபராதம் விதித்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பெண் மிகவும் மனமுடைந்து போனதாக பேட்டி அளித்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடுக்க போகிறேன் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

 டெல்டா விமானம்

டெல்டா விமானம்

கிரிஸ்டல் தட்லாக் என்ற பெண் பிரான்சில் இருந்து அமெரிக்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் மூலம் வந்துள்ளார். அவர் நியூயார்க் வரும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த ஆப்பிளை வாங்கியுள்ளனர். அதோடு தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

 விமானத்தில் கொடுத்த ஆப்பிள்

விமானத்தில் கொடுத்த ஆப்பிள்

அந்த ஆப்பிள் விமானத்தில் உணவுடன் கொடுக்கப்பட்ட ஆப்பிள் ஆகும். ஆனால் கிரிஸ்டல் தட்லாக் அதை சாப்பிடாமல், பின்பு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தன்னுடைய பையில் எடுத்து வைத்துள்ளார். இதை சோதனை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த ஆப்பிளில், டெல்டா ஏர்லைன்ஸின் முத்திரையும் இருந்துள்ளது.

 33 ஆயிரம் அபராதம்

33 ஆயிரம் அபராதம்

இதையடுத்து அந்த ஆப்பிளுக்கு மொத்தமாக 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெண் எவ்வளவு விளக்கம் அளித்தும், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் செல்ல முடியும் என்றுள்ளனர். இதையடுத்து பல பேச்சுவார்த்தைக்கு பின், அவர் 33 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

 என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதற்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து, பச்சை உணவுப் பொருட்கள், காய்கறிகளை கையில் இப்படி கொண்டு வர கூடாது. அப்படி கொண்டு வந்தால் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்றுள்ளனர். ஆனால் அந்த பெண் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

English summary
Woman fined Rs.33000 for bringing Delta in-flight apple through Customs. The woman named Crystal Tadlock decided to file a case against the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X