For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறத்தை விடுங்க.. மனசு எத்தனை வெள்ளை பாருங்க.. சிகாகோ கொண்டாடும் தேவதை!

வீடிழந்த மக்கள் 30 பேருக்கு பெண் ஒருவர் ஓட்டலில் அறை எடுத்து தந்து உதவியுள்ளார்.

Google Oneindia Tamil News

சிகாகோ: கறுப்பர்கள் என்றாலே ஒதுக்கி வைத்து பாகுபாடும் பார்க்கும் கூட்டத்திற்கு மத்தியில், கடும் குளிரில் சிக்கி தவிக்கும் சிகாகோ மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து அத்தனை பேரின் உள்ளங்களையும் கவர்ந்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. மைனசிலும் இப்படி ஒரு மைனஸ் டிகிரி குளிரை அந்த நாட்டு மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.

வீடு, வாசல் என இருக்கும் மக்களே அவதிப்பட்டு வரும் நிலையில், வீடில்லாமல் பிளாட்பாரத்தில் இருப்பவர்களின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்!

உதவ முன்வந்த பெண்

உதவ முன்வந்த பெண்

இங்கு நிறைய பேருக்கு வீடில்லாமல், கூடாரங்களையும், ஷீட்டுகளையும் அமைத்து வாழ்ந்து வருவதால், இப்போது நிலவும் குளிரை அவர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இது போன்றவர்களுக்கு உதவத்தான் ஒரு பெண் முன்வந்திருக்கிறார்.

ஹோட்டல் அறைகள்

ஹோட்டல் அறைகள்

அவர் பெயர் காண்டிஸ் பேயன் என்பது. வயது 34 ஆகிறது. ரியல் எஸ்டேட் துறையில் புரோக்கராக வேலை பார்க்கிறார். பாதிக்கப்பட்டவர்களை கண்ட அந்த பெண், உடனடியாக, ஆம்பர் இன் என்னும் ஒரு லாட்ஜுக்கு போன் செய்தார். எத்தனை ரூம்கள் காலியாக இருக்கிறது என கேட்டார்.

நண்பர்கள் உதவி

நண்பர்கள் உதவி

30 ரூம்கள் காலியாக இருப்பதை தெரிந்ததும், உடனே புக் செய்துவிட்டார். ரூம் வாடகை பற்றியெல்லாம் இவர் கவலைப்படவில்லை. ரோட்டில் குளிரில் தவித்து வருபவர்களை லாட்ஜுக்கு அழைத்து செல்ல இன்ஸ்டாகிராம் மூலம் உதவி நண்பர்களிடம் உதவி கேட்டார்.

செலவுக்கு பணம்

செலவுக்கு பணம்

பிறகு அனைவரையும் ரூமில் கொண்டு போய் விட்டு, சாப்பாட்டையும் வரவழைத்து தந்து கை செலவுக்கு பணத்தையும் தந்து விட்டு வட்டார். இந்த விஷயம் உடனே பரவ ஆரம்பித்ததும், காண்டிஸ் பேயனுக்கு நிறைய பேர் உதவி செய்ய முன்வந்துவிட்டார்கள்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இதுகுறித்து அவர் சொல்லும்போது "ஒரு பெண்ணுக்கு இத்தனை பேர் உதவுவார்கள் என்று நினைச்சுகூட பார்க்கவில்லை" என்றார். சிகாகோவின் நடுங்கும் குளிருக்கு நடுவிலும் பாராட்டு மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறார் காண்டிஸ் பேயன்.

English summary
Chicago Woman Booked Hotel Rooms for 80 Homeless People
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X