For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்.. தன் பிரசவத்திற்கு தானே மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற பெண் அமைச்சர்!

நியூசிலாந்தின் பெண் மத்திய அமைச்சர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

By Rajeswari
Google Oneindia Tamil News

வெலிங்டன்: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நியூசிலாந்தின் பெண் மத்திய அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது .

இந்த சம்பவத்தை குறித்து, ஜூலி ஜெண்டேர், காரில் போதுமான இடம் இல்லை என்பதால் சைக்கிளில் சென்றதாக கூறியுள்ளார். நேற்று காலை தனது இன்ஸ்டாகிராமில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இது மிகவும் வைரலாகி உள்ளது. உலகம் முழுக்க அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலகின் இரண்டாவது தலைவர்

உலகின் இரண்டாவது தலைவர்

கடந்த ஜூன் மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக பணியில் இருந்தபோதே குழந்தையை பெற்ற உலகின் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில்தான் ஜூலி அன்னே ஜென்டெர் குழந்தை பெற்றுள்ளார். 38 வயதாகும் ஜெண்டேர் அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராக பணியாற்றுகிறார். இவர் ஒரு சைக்கிள் பிரியர்

இன்ஸ்டாகிராம் பதிவு

அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் இதுகுறித்து, எங்களின் காரில் உதவியாளர்களுக்கு அமர இடமில்லாத காரணத்தால், என்னுடைய கணவரும், நானும் மிதிவண்டியை கொண்டு பயணம் செய்தோம். அப்படி பயணம் செய்ததுகூட, எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவு பெரிய வைரலாகி உள்ளது.

கூடுதல் இருக்கை

அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஜெண்டேர், தான் குழந்தைக்காக, "நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம்" என்ற பதிவின் மூலம் அறிவித்திருந்தார். மூன்று மாதம் தனது பேறுகால விடுப்பை எடுக்கப்போகும் இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணைந்துள்ளார்.

அனுமதித்தது

அனுமதித்தது

ஆஸ்திரேலியா அரசு கடந்த 2016ஆம் ஆண்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்போதே அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால்/ புட்டிப்பால் கொடுப்பதை அனுமதித்தது.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஸ்வீடன் மற்றும் இத்தாலியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் குழந்தைகளை கையில் எடுத்துச்சென்று வாக்களிப்பது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இந்த சம்பவ வைரலாகி உள்ளது.

English summary
Union Minister of New Zealand, a pregnant woman, has been surprised by the incident that her own bicycle runs to her hospital in order to get her baby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X