For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் இல்லை.. தாலிபான்கள் தடாலடி

Google Oneindia Tamil News

பீஜிங்: ஆப்கானிஸ்தான் மண்ணில் சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்த விட மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    ஒரு பக்கம் Antony Blinken-ன் India வருகை.. மறுபக்கம் தலிபான்களுடன் China அமைச்சர் சந்திப்பு

    அதேபோல, ஆப்கானிஸ்தானின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், நாட்டை மீண்டும் சீரமைப்பதிலும் தாலிபான்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு வருகை தந்த தாலிபான் தூதுக்குழுவிடம் இந்த தகவலை தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது.

    சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யியை வடக்கு சீன நகரமான தியான்ஜினில் 9 தாலிபான் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சமாதான முன்னெடுப்புகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல்மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல்

    ஆப்கானிஸ்தான் நிலவரம்

    ஆப்கானிஸ்தான் நிலவரம்

    ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கு எதிராக தாலிபான்கள் முன்னேறி வருகிறார்கள். இந்த நிலையில், சீனாவுக்கு தாலிபான்கள் குழு போயுள்ளது, சர்வதேச அரங்கில் அந்த குழுவின் அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்தக்கூடும் என்கிறார்கள் சர்வதேச நிகழ்வு நிபுணர்கள்.

    பல நாடுகள்

    பல நாடுகள்

    கத்தாரில் தாலிபான் போராளிகளுக்கு ஒரு அரசியல் அலுவலகம் உள்ளது, இந்த மாதம் ஈரானுக்கும் தாலிபான்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினர். அங்கு அவர்கள் ஆப்கானிய அரசு தூதுக்குழுவுடன் சந்திப்புகளை நடத்தினர்.

    தாலிபான்கள் தகவல்

    தாலிபான்கள் தகவல்

    "அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை மற்றும் சமாதான செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டன" என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் சீனா வருகை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

     சீனா அழைப்பு

    சீனா அழைப்பு

    தாலிபான் பேச்சுவார்த்தையாளரும் துணைத் தலைவருமான முல்லா பரதர் அகுண்ட் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் சிறப்பு தூதரையும் சந்தித்துள்ளதாகவும், சீன அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இந்த பயணம் நடந்துள்ளது என்றும் நயீம் மேலும் கூறியுள்ளார்.

    பக்கத்து நாடு

    பக்கத்து நாடு

    செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெறுவதால், ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தாலிபான்கள் பெரும் எழுச்சி கண்டுள்ளனர். சீனாவுடன் ஆப்கானிஸ்தான் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வகையிலும் தாலிபான்கள் குழு சீனா சென்றது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

     சீனாவுக்கு எதிரான செயல்பாடுகள்

    சீனாவுக்கு எதிரான செயல்பாடுகள்

    "சீனாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த யாரையும் தாலிபான்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சீனாவுக்கு உறுதியளிக்கப்பட்டது" என்று தாலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளில் சீனா தலையிட மாட்டார்கள், ஆனால் நாட்டில் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அமைதியை மீட்டெடுக்கவும் உதவுவார்கள் என்றும் நயீம் தெரிவித்துள்ளார்.

    English summary
    "The delegation assured China that they will not allow anyone to use Afghan soil against China," Naeem said. "China also reiterated its commitment of continuation of their assistance with Afghans and said they will not interfere in Afghanistan's issues but will help to solve the problems and restoration of peace in the country."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X