For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகொரியாவின் ஏவுகணை தாக்க வருகிறது.. பாதுகாப்பு அதிகாரி அழுத்திய தவறான பட்டனால் விபரீதம்

அமெரிக்காவில் இருக்கும் மாகாணம் ஒன்றிற்கு ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாதுகாப்பு அதிகாரி அழுத்திய தவறான பட்டனால் விபரீதம்- வீடியோ

    ஹவாய்: அமெரிக்காவில் இருக்கும் ஹவாய் மாகாணத்தில் கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டது. வடகொரியாவின் ஏவுகணை தாக்க வருவதாக கூறப்பட்டது.

    ஆனால் அணு ஆயுதமா என்ன மாதிரியான ஏவுகணை என குறிப்பிடப்படவில்லை. மேலும் என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்பட இருக்கிறது என்றும் கூறப்படவில்லை.

    தற்போது இந்த எச்சரிக்கை குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகாரி ஒருவர் அழுத்திய தவறான பட்டனால் இத்தனை விபரீதமும் நடந்துள்ளது.

    அணு ஆயுத பிரச்சனை

    அணு ஆயுத பிரச்சனை

    அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் தற்போது பிரச்சனை நிலவி வருகிறது. என்னுடைய மேசையில் அணு ஆயுத பட்டன் இருக்கிறது என்று வடகொரியா அதிபரும், என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது என்று அமெரிக்க அதிபரும் சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.

    மெசேஜ்

    மெசேஜ்

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் ஹவாய் மாகாண மக்களுக்கு முக்கிய மெசேஜ் ஒன்று சென்றுள்ளது. அதில் ''ஹவாயை நோக்கி ஏவுகணை ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். இது பயிற்சி இல்லை நிஜம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தவறு

    தவறு

    அதன்பின் தான் அது தவறான எச்சரிக்கை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி தவறான பட்டன் ஒன்றை அழுத்திய காரணத்தால் இப்படி நடந்து இருக்கிறது. ஆனால் இது தவறான அறிவிப்பு என்ற தகவலும் மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

    அதிகாரி வாக்குமூலம்

    அதிகாரி வாக்குமூலம்

    தற்போது இதுகுறித்து அந்த அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் உண்மையிலேயே தாக்குதல் நடக்க இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த பட்டனை அழுத்தியதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    English summary
    A defence ministry workers in America sends false missile alert to people in Hawaii. He panics that the missile has launched by North Korean military in their zone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X