For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ், தோல்வியில் மிளிரும் பெல்ஜியம்

By BBC News தமிழ்
|

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.

கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை
Getty Images
கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன.

முன்னேறி வந்த பெல்ஜியம்

பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை.

அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் பெல்ஜியம் அணிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கூறுகிறார் பெல்ஜியம் அணியின் மேலாளர் ராபர்டோ மார்டினஸ். அவர், "பெல்ஜியம் அணியில் மிகத் திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர்" என்கிறார்.

கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை
Getty Images
கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை

இதுவரை எந்த பெரிய போட்டிகளிலும் வெல்லாத பெல்ஜியம் அணி, ரஷ்யாவில் நடந்துவரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் வியத்தகு வகையில் விளையாடியது.

இதுவரை நிகழ்த்திய மாயாஜாலம்

அரை இறுதியில் தோற்றிருந்தாலும் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே விளையாடியது பெல்ஜியம். இதற்கு என்ன காரணம், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என்பதற்கு பதில் தருகிறார், பிபிசி உலக சேவையின் பெர்னாண்டோ டுவார்ட்.

அவர், " பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும். உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர். 2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்." என்று குறிப்படுகிறார்.

உலகக் கோப்பை செல்லும் அணி?

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டது பிரான்ஸ்.

கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை
Getty Images
கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கை

இன்று (புதன்கிழமை) இங்கிலாந்து குரேஷியாவுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் மோதும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை பிரான்ஸ் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. பாரீசில் நடந்த அந்தப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது அது. வரலாறு திரும்புமா, அல்லது வேறு பாதையில் செல்லுமா? காத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
France will face England or Croatia in the World Cup final after edging past European neighbours Belgium in the semi-final in St Petersburg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X